நம் குரல்

தமிழ்மணம் நேய நண்பர்களே!

தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராக இந்தப் பொங்கல் வாரம் முழுதும் எழுதுகிறேன். என் போன்றவர்களுக்கு இது போல் எழுதப் பக்கங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி தான். தமிழ்மணத்திற்கு நன்றி. கண்ணகியைப் பற்றியும் அவளைச் சூழ்ந்த பெண்ணிய பிம்பங்களையும் அர்த்தங்களையும் விரித்து எழுத விரும்பியிருக்கிறேன். இந்த ஏழு நாட்களும் கண்ணகியைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம் என்ற எண்ணம். கதை வலைகளால் நெய்யப்பட்டவள் அல்லவா கண்ணகி? தொடர்ந்து உரையாடலில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வலைப்பதிவு தொடங்கிய பின் எந்தப் பத்திரிகையையும் சார்ந்திருந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆகிவிட்டது. எழுதி முடிக்கும் பொழுதெல்லாம் பிரசுரிப்பதும் உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதும் வசதியாகிவிட்டது. அதனால் எழுதுவது என்பது எனது அன்றாட ஒழுக்கமும் ஆகிவிட்டது.
நிறைய முரண்களுடைய சமூக நிகழ்வுகளினூடே நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டம் ஆரோக்கியமில்லாமல் போகும் போதெல்லாம் எவரோ எங்கிருந்தோ உயிர்ப்புடன் எழுதும் ஒரு கவிதை தெம்பு தருவதை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்குத் தான் எழுத்து என்றும் நம்புகிறேன். நீங்களும் இதை ஆமோதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதத் தொடங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.

குட்டி ரேவதி

25 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இந்த ஏழு நாட்களும் கண்ணகியைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம் என்ற எண்ணம். கதை வலைகளால் நெய்யப்பட்டவள் அல்லவா கண்ணகி?


உண்மைதான் எழுதுங்கள்..
ஆர்வமுடன்..

கே.என்.சிவராமன் சொன்னது…

அன்பின் ரேவதி,

ஒருவகையான குதூகல மனநிலையில் இந்தப் பின்னூட்டம். நட்சத்திரமாக உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.

கதை நெசவால் நெய்யப்பட்ட கண்ணகி குறித்த உங்கள் உரையாடலை வாசிக்க ஆசை.

அதேநேரத்தில் ஆண்டாள் குறித்தும் ஒரு உரையாடலை தொடங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் அல்லது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

உடல் ஒடுக்க இயந்திரமாக ஆண்டாளின் பிம்பத்தை முன்வைத்து பிரேம் 'மேலும்' இதழில் எழுதிய பிரதியை வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

கவிதைகள் வழியாக பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள். இந்த 7 நாட்களும் அதேபோல் உரையாடல்(கள்) தொடர கண்ணகி அருள் புரியட்டும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கண்ணா.. சொன்னது…

தமிழ் மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்..

சந்தனமுல்லை சொன்னது…

வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன்!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் மேடம்

செ.சரவணக்குமார் சொன்னது…

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள். கண்ணகி குறித்து எழுதப்போவதாக சொல்லியிருப்பது மகிழ்ச்சி.
திரு.பைத்தியக்காரன் சொன்னதுபோல ஆண்டாள் குறித்த உங்கள் பார்வையை முன்வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி.

நிலாரசிகன் சொன்னது…

வாழ்த்துகள்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//இந்தக் காலகட்டம் ஆரோக்கியமில்லாமல் போகும் போதெல்லாம் எவரோ எங்கிருந்தோ உயிர்ப்புடன் எழுதும் ஒரு கவிதை தெம்பு தருவதை நான் உணர்ந்திருக்கிறேன். //

நானும்தான்.

நட்சத்திர வாழ்த்துகள் மேடம். நிறைய எழுதுங்க.

தருமி சொன்னது…

வருக
வாழ்த்துக்கள்.

Dr.Rudhran சொன்னது…

வாழ்த்துகள்

கையேடு சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

All the best.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

வாழ்த்துகள் ரேவதி.

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

ஜோதிஜி சொன்னது…

உங்களுக்கும் உங்களை தேர்ந்து எடுத்த தமிழ் மணத்திற்கும் வாழ்த்துகள்

Unknown சொன்னது…

வாழ்த்துகள் ரேவதி.

ஜோ/Joe சொன்னது…

வருக!
வாழ்த்துகள்!

குப்பன்.யாஹூ சொன்னது…

வாழ்த்துக்கள்.

ஆனால் கண்ணகியை நாம் முன் உதாரணமாக கொள்ளலாமா


ஒரு மன்னன் தவறான தீர்ப்பு கொடுத்தான் அல்லது தன கணவன் இறப்பிற்கு காரணம் என்பதால், சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு அந்த ஊரையே அழித்தது எந்த வித நியாயம் எனக்கு புரிய வில்லை.

கண்ணகி விதைத்த வன்முறை தீ தான் இன்னும் பாண்டிய மண்ணில் வன்முறையும், அரிவாள் கலாச்சாரமும் நிலவ காரணமோ.

தமிழ்நதி சொன்னது…

தோழி,

தமிழ்மண நட்சத்திரமானதற்கு முதலில் எனது வாழ்த்துக்கள். உங்களை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கும்தான். இன்றைய தமிழ்ச் சூழல் பெண்கள் குறித்த ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதாக அமையாமல் வேறொரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு இன்மையைக் காணமுடிகிறது. கண்ணகி பற்றி நீங்கள் உரையாடும்போது சமகாலமும் அதில் சேர்ந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறேன்.

வால்பையன் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழி!

Muruganandan M.K. சொன்னது…

தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். தொடரைப் படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.

manjoorraja சொன்னது…

அறியப்பட்ட கவிதாயினியாக இருக்கும் நீங்கள் தமிழ்மண நட்சத்திரமாக மிளிர்வதில் மகிழ்ச்சி. பனிக்குடம் படித்திருக்கிறேன்.
வெற்றியுண்டாகட்டும்.

பாராட்டுகள்
வாழ்த்துகள்