tag:blogger.com,1999:blog-77000420970621984722024-03-12T10:22:41.164+05:30குட்டி ரேவதிகுட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.comBlogger384125tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-39314454043492119602016-05-05T14:43:00.000+05:302016-05-05T14:44:17.970+05:30“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.
* ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று கேட்கின்றனர். ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார்.
* 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே, இந்தியப் பெண்ணியவாதிகளும், ஊடகங்களும் கூட வேடிக்கை பார்ப்பதுடன் கடந்தும் செல்கின்றனர்.
* நிர்பயா விடயத்தில் ஒருங்கிணைந்தது, போல் இதில் பெண் சமூகம் ஒருங்கிணைய சாத்தியமில்லை. அதில் வன்முறையை நிகழ்த்தியவர்கள் ஒடுக்கப்பட்ட ஆண்கள் என்பதால் தண்டனையைப் பெற்றுத்தருவதில், ஒடுக்கப்பட்ட ஆண்கள் மீதான வெறுப்பைச் செயல்படுத்துவதில் பெண்கள் வெற்றி கொண்டார்கள் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
* ஜிஷாவின் படுகொலையில் மட்டுமல்ல, சமீபத்திய சாதிஆணவப்படுகொலையாகட்டும், பள்ளி மாணவிகள் படுகொலையாகட்டும், எல்லா படுகொலைகளிலுமே வன்முறையை நிகழ்த்தும் விதத்தில், கரும்பை நுழைப்பது, முலைகளை அறுப்பது, குடலை உருவுவது என்று 'படுகொலை' ஒரு கேளிக்கையாவதை உணரமுடிகிறது. ஃபேஸ்புக்கில் நாம் எப்படி அவதூறுகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் சுவாரசியம் பெறுகிறோமோ அது போலவே.
* ஜிஷாவின் வன்கொலையில் எவ்வளவு காட்டுக்கத்தல் கத்தினாலும் நீதி என்பது ஒரு பிஸ்கெட் துண்டுக்குத் தான் சமானம். நிர்பயாவின் விடயத்தில் இல்லாத, பெரும் அமைதி நிலவும் இந்த நேரத்திலேனும் பெண்ணியவாதிகள் எல்லாம் பார்ப்பனீயமயமாகிவிட்டதை உண்மையான போராளிச்சமூகம் உணரவேண்டும்.
* பார்ப்பனீய பெண்ணியவாதிகள், காலங்காலமாக பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் 'பெர்சனல்' ஆதாயங்களைக் காரணமாக வைத்து, 'பிரித்துவிடுவது' ஒன்றே அவர்கள் ஆகச்செய்யும் சிறந்த வேலை, கலை. அப்படி பிரித்து வைத்திருந்தால் தான் இவர்களின் பார்ப்பன அடையாளங்களை, அதிகாரங்களை, அங்கீகாரங்களை இழக்காமல் இருக்கமுடியும். இது தான் அவர்கள் முன்வைக்கும் 'பெண்ணியம்'.
*பெண்கள் ஒருங்கிணைந்தால், பார்ப்பனீய பெண்ணியவாதிகள், தங்களின் சாதிய அங்கீகாரத்தை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் அவர்கள் பெண்கள் ஒருங்கிணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ( இவை தாண்டி, பார்ப்பனச் சமூகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை அப்படி உணராத, தம் அடையாளங்களை தொடர்ந்து மறுக்கும் பெண்கள் யாரேனும் உண்டா, இங்கே)
* அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின், அதாவது சமூகத்தின் சாதிய விழிப்புணர்வின் மறு தூண்டலுக்குப்பின், இந்தியாவின் எந்த மூலையிலுமே பெண்கள் இயக்கத்தைக் கட்டைமைக்க முடியவில்லை. இது ஆய்வுப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. எங்கெங்கு பெண்கள் இயக்கம் தோன்றினாலும், அங்கே சாதி அதிகாரப் பெண்கள் நுழைந்து சாதிமறுப்பு அமைப்புகளை 'ப்ளேட்' போட்டு கத்தரிக்கவே செய்திருக்கிறார்கள்.
* 'தலித்' என்றால், சாதிப்படிநிலைகளில் சேராது. ஒடுக்கப்பட்டவர்கள் என்றே பொருள். ஆனால், சமீபத்தில், பார்ப்பனீயச் சிந்தனைச் சாய்வால், மெல்ல, மெல்ல 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது.
* இந்த சாதிமயப்போக்கால், ஏற்கெனவே, 'தலித்' சமூகத்தின் மீதான வன்முறைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதி ஆதிக்க சமூகம், 'தலித் சாதிப்' பிரச்சனைகளை, வன்முறைகளை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவே தூண்டும்.
* 'சாதி ஒழிப்பு' நூலில், அம்பேத்கர் இரண்டு முக்கியமான விடயங்களை முன் வைக்கிறார். ஒன்று: அகமணமுறையிலிருந்து விடுபடுதல். இரண்டாவது: இந்த நாட்டின் நீதிமுறை என்பது பார்ப்பனீய நீதிமுறை என்பதை உணர்ந்து அதை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடருதல்.
* “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - என்று கதறுகிறார், ஜிஷாவின் தாய். இந்திய நீதிமுறை ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஒரு பொழுதும் வழங்கியதில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
* இப்பொழுது, 'தலித்' என்பதும் இங்கே சாதியாகிவிட்டது. சாதியத்தின் ஸ்பெஷல் தன்மை என்னவென்றால், நம் வீட்டில் வன்முறைகள் நிகழாத வரை, எல்லாமே நமக்கு வேடிக்கை என்ற குணாதிசயம் தான். யாரும் 'மூச்' விடமாட்டார்கள்.
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-49243603759097503002016-04-14T12:15:00.001+05:302016-04-14T12:16:32.830+05:30நான் சாதியற்றவள்!
என்னிடம் உயர்சாதி, ஆணவக்கொலைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டீர்கள். ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஓர் அறிக்கையில் என் பெயரையும் இணைத்துக்கொள்கிறீர்கள் என்பதாய் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.
இப்பொழுது உங்கள் இணையதளத்தின் தலைப்பில், ஆதிக்கசாதி, என்றும் என் புகைப்படத்தின் மீது உயர்சாதி என்றும் அச்சாகி இணையம் எங்கும் பரவிவருகிறது. ஒன்றுக்கொன்று முரணாக, எந்தக் கருத்தியல் தெளிவுமற்று வெளியாகியிருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
மேலும், நீங்கள் உண்மையில் செய்திருப்பது ‘புகைப்படம்’ சார்ந்த பிரச்சாரம். அதில் என்னுடைய எந்தப்புகைப்படத்தை உபயோகிக்கப்போகிறீர்கள், அதன் மீது என்ன வரிகளை அச்சாக்கப் போகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. அந்த வரிகளையும் அந்தப் புகைப்படத்தையும் என்னிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கவில்லை.
நான் சாதியற்றவள். என் எழுத்து வாழ்வில் இதுவரை நான் உறுதிகொண்டு சம்பாதித்த நன்னம்பிக்கைகளை இந்தப்புகைப்படம் பிரச்சாரம் முழுமையாகச் சிதைத்துவிட்டது.
நீங்கள் பதிவிட்ட அன்று முழுநாளும் ஒரு பாடல் பதிவில் இருந்ததால், அதைக் கவனிக்கவில்லை. பின் மாலையில், நண்பர்கள் சிலர் அறிவித்ததன் பின்தான் அறிய நேர்ந்து என் மறுப்பைத் தெரிவிக்கமுடிந்தது.
ஆனால், அதற்குள்ளாகவே, எனக்கு எதிராக நீண்டநாட்களாகச் செயல்பட்டு வரும் நண்பர்கள் எல்லோரும் இதைத் தங்களின் நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியிருக்கவேமாட்டேன். இன்னும் என் புகைப்படம் ‘ ippodhu.com தளத்தில் நீக்கப்படாமல் இருப்பதும், அது மீண்டும் மீண்டும் சுற்றுக்கு வருவதும் அதிர்ச்சியையும், வேதனையும், கடுமையான மனஉளைச்சலையும் தருகிறது.
நான் உடன்படாத ஒரு செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்கமுடியும். உடனே, அந்தப் புகைப்படத்தை உங்கள் செய்தித்தளத்திலிருந்து நீக்கவேண்டும். புகைப்படம் நீக்கியது குறித்த விளக்கத்தையும் உங்கள் இணையத்தளத்தில் பதிவிடவேண்டும்.
இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் அதை நீக்கவில்லையெனில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
குட்டி ரேவதி, கவிஞர்
(மார்ச் 25, 2016)
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-89585592034621162232016-03-18T12:18:00.003+05:302016-03-18T12:28:51.949+05:30சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!
* 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது.
*நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. நானும்.
* எந்த அளவிற்கு 'நான் இந்தச் சாதியுடையவள்' என்று ஒருவர் சொல்கிறாரோ, அந்த அளவிற்கு, 'நான் சாதியற்றவள்' என்று சொல்வதும் இந்த அவலமான உலகத்தில் ஒரு சுவாரசியமான புனைவு. அந்தப் புனைவை நானும் 'எனக்கு நானே' ஏற்படுத்திக்கொண்டு தான் வாழ்ந்துவருகிறேன். ஏனெனில், அப்படி சொல்லிக்கொள்வது என் வாழ்விலும் சமூக முற்போக்குத் தளங்களில் ஒரு சொகுசாக இருக்கிறது. அவ்வளவே. ஆனால், அது குறித்த பொதுவெளி உரையாடலுக்குக் கூட, நீங்கள் சாதிமறுப்பு நாட்டாமைகளின் கடவுச்சீட்டிற்குக் காத்திருக்கவேண்டும். உண்மையில் இதைப்பிற, பெண்ணிய விவாதங்களில் இதற்கு முன் எந்தப் பெண்ணியவாதியும் முன்வைத்ததில்லை. முன்வைக்கவும் முடிந்ததில்லை. அதற்கான வாய்ப்பையும் பெண்ணியவாதிகள் ஏற்படுத்திக்கொண்டதில்லை. மிகவும் வசதியாக ஒதுங்கிக்கொள்வார்கள், அல்லது மறந்துவிடுவார்கள். கடந்துசென்ற, ‘பெண்கள் தினத்திலேனும்' யாரேனும் முன்வைத்தார்களா, என்ன. அட, போங்கப்பா!
* எல்லாப்பெண்ணிய நாட்டமைகளும் ஓடிவந்து, நாட்டாமை தொனியிலேயே இதை என்னிடம் கேள்வி கேட்பது மிகவும் வியப்பானது, திகைப்பானது. இவ்வளவு காலம் உண்மையிலேயே இவ்வளவு சாதிய மறுப்பாளர்கள் பெண்ணியவாதிகளாய் இருந்திருக்கிறார்களா என்று அறிய நேர்ந்ததும் என் நல்வாய்ப்பே.
* பெண்ணியவாதிகளின் பசப்புகளும் பாசாங்குகளும் உலகம் அறிந்தது. ஓர் ஆணிடம் என்றால், அவர் ‘ஆணாதிக்கவாதி’ என்று முகத்திற்கு நேரேயே ஒரு கருத்தை முன்வைக்கமுடியும். எதிர்ப்பைப் பதிவுசெய்யமுடியும். ஆனால், பெண்ணியவாதிகள் அவரவர் வாடகைக்கு வாங்கிய சாதிக்குடைகளின் கீழ் ஒளிந்து கொண்டுதான் பெண்ணியவாதத்தையே நிகழ்த்துவார்கள். பெண்ணிய, முற்போக்கு ஒருமை இல்லாதவர்கள். அடுத்தடுத்த பெண்களை, ஆண்களின் அதே வன்மத்துடன் எதிர்கொள்வதில் ஈடுஇணை இல்லாதவர்கள். பாருங்கள். எல்லோரின் உரையாடலையும் சென்று மீண்டும் வாசியுங்கள். அவரவர் சாதிமுகங்கள் அதில் பளபளக்கும். அதிகாரமும் வியர்க்கும். அவரவர் கோட்டைகளும் எல்லைகளும் கூடத்தெளிவாகும்.
* சாதிய ஒழிப்பிற்கான, சர்வ அதிகாரத்தையும் அதற்கான தடிகளையும் யார் உங்களிடம் தந்தது. எந்தச் சாதி அதிகாரத்தின் பேரில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகிறீர்கள்? அந்தத் தடியின் பின்னால், சாதி அதிகாரத்தை ஒழிப்பது குறித்த விவாதத்தையே நீங்கள் தான் மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருப்பது போன்ற தொனி, மிகவும் மிரட்டலாக இருக்கிறதே. உங்கள் இமேஜைக் கொஞ்சம் சரிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில், அதில் 'பார்ப்பனீய' வாடையும் இதுவரைப்பொத்தி வைத்திருந்த ஒற்றை அதிகாரமுகமும் வெளிப்படையாகிறது. இதில் நீங்கள் எங்கே சாதியற்றவர் ஆகிறீர்கள்? யார் உங்கள் கையில் 'அம்பேத்கரை' ஒரு சிலையாக்கிக் கொடுத்தது?
* சாதிமறுப்பு நடவடிக்கைகளை, தலித் மக்கள் மட்டுமே செய்யவேண்டும் என்றால், 'தலித் அல்லாத’ சாதி ஒழிப்பு நடவடிக்கையில் முழுமுனைப்புடன் ஈடுபடுபவர்களை, முற்போக்குப் பெண்களை நீங்கள் எப்படி அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள். அம்பேத்கரைக் குத்தகை எடுத்திருப்பவர்கள் மட்டுமே சாதிய மறுப்பு நடவடிக்கைகள் செய்யலாம் என்றால், முதலில் நீங்கள் அம்பேத்கரை முழுமையாக வாசித்துவிட்டு வந்து பணியாற்றுவது தானே சிறப்பாக இருக்கும்.
* 'இப்போது.காம்' சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நீங்கள் தான் என்னை சாதி அடையாளத்துடன் பார்க்கிறீர்கள். ஏனெனில், இதுவரை நீங்கள் அப்படித்தான் பார்த்துவந்திருக்கிறீகள். பெண்களைச் சாதியாக பார்க்கும் மனம், பார்ப்பனீய மனம். அது என்னைச் சாதியில்லாதவள் என்று அம்பேத்கர் அறிவியலின்படிக் கூட ஏற்கத்தயங்குகிறது. உங்கள் மனதில் உள்ள சாதியத்தந்திரங்களும் மாய்மாலங்களும் ‘மேனிப்புலேஷன்களும்’ வெளிப்படையாகின்றன, என்பதை முழுமனதுடன் நீங்கள் இப்பொழுதாவது ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
* இதுவரை, படைப்பிலும் எழுத்திலும் நான் முன்வைத்துவந்த, என் சாதிமறுப்பு முன்மொழிதல்களை சமூகத்தின் எல்லா இடங்களிலும் கவனமாகப் புறக்கணித்துவிட்டு, இந்த இடத்தில்வந்து தங்களைச் சாதியமறுப்பாளராக முன்வைப்பது குறித்த உங்கள் பாசாங்குகளை நான் அறியும்போது உங்கள் ஒப்பனை ஒரு நீர்கோலம் அழிவதைப் போல கலைவதை உணர்கிறேன். வன்மையான கண்டனங்களை முன்வைக்கிறேன். வட்டத்தை வரைந்து கொண்டு, சமூகத்தளங்களில் வீறு கொண்டு எழுதி முன்னகரும் பெண்களை வட்டத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும், தங்கள் தங்கள் சாதிகளின் வன்முறைகளிலிருந்து வெளியேறத்துடிக்கும் பெண்களை ஒற்றைமுனை சாதிஅதிகாரத்தால் கண்டிக்கமுயலும், உங்களின் தடிகள், காவல்துறையின் தடிகளை விட வன்மம் நிறைந்தவை.
* சாதிஒழிப்பிற்கு, 'தலித்' பிரிவைச் சேர்ந்த கருத்தியலாளராகவோ அல்லது, 'சாதியற்றவர்' என்று கூக்குரலிட்டுக்கொள்வதோ மட்டுமே போதுமானது இல்லை. சமூகத்தின் குறுக்குவெட்டில் இறங்கி, சாதி நிறைந்த சமூகத்திடம் சாதிபற்றிய உரையாடல்களை நிகழ்த்தும் பெருமனம் இல்லாத, 'எக்ஸ்க்ளூசிவ்னெஸ்' சாதிமறுப்பு போலித்தனமானது, கண்டனத்திற்குரியது. தான் மட்டுமே தலைவராகவேண்டும் என்ற ஆசைகொண்டது. யாரையும் உள்ளடக்கிக்கொள்கிற, எவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் மனமற்ற, சிந்தனையற்ற போக்கு, அதே பார்ப்பனீய போக்கு தான் இன்னும் இன்னும் வன்முறைகளை அதிகப்படுத்துகிறது.
* இன்றைய தினத்தில், ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படைப்பாளியும் அரசியல் தலைவருமான சிவகாமி அவர்களுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து களப்பணியில் பணியாற்றி வந்தக் காலத்தில், வம்படியாய் என்னை சிவகாமியிடமிருந்து பிரித்தார்கள். ஒரே காரணம், ‘தலித் அல்லாதவர்’ அந்தத் தலைவருடன் இணைந்து பணியாற்றத் தகுதியற்றவர் என்பது தான். இத்தனைக்கும் சிவகாமி அவர்களுடன் என்னுடைய களப்பணியும் உறவும், எந்தத் தரச்சோதனைக்கும் தயாரானது.
* இத்தனை வருடங்களும் எப்படிப் பெண்ணியவாதிகள், பார்ப்பனீய சிந்தனைப் பதிப்பகங்களுடனும், படைப்பாளிகளுடனும் ‘க்யூ’வில் நின்று தங்கள் பெண்ணியவாதத்தைத் தொடர்ந்தபோது, நான் மட்டும் எதிர்த்திக்கில் நின்று தொடர்ந்தேனோ அது போலவே இனியும் என் உரையாடல்களையும் விவாதங்களையும் தொடர்வேன். இப்படியான, ஒரு நகைமுரணான சம்பவம் (இப்போது.காம்) தரும் வாய்ப்பிற்காக நான் மிகவும் காத்திருந்தேன் என்று தான் சொல்லவேண்டும். 'பெண்ணியவிவாதமும்' அதன் பாசாங்குகளும் இதனால் வெளிச்சத்திற்கு வருகின்றன.
* நான் நாசமாகப் போவது இருக்கட்டும். (முதலில், 'நாசமாய்ப் போவது' என்று பேசுவது பகுத்தறிவு வாதமும் அன்று. உங்கள் பகுத்தறிவுவாதத்திற்கு அழகும் அன்று.) நான் ஒழிக்க முடியாது போன சாதிஆணவக் கொலைகளை நீங்களேனும் ஒழித்தால், ஒரு சாதாரணக் குடிமகளாக நான் உங்களுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.
* இந்த இலட்சணத்தில் ‘ஆண்'சாதிமறுப்பாளர்களின் குறுக்கீடுகள் வேறு.
வாருங்கள். உரையாடலைத் தொடர்வோம்.
~ குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-86026577204120453722016-02-06T13:17:00.000+05:302016-02-06T13:21:00.316+05:30வீரம் மிகு பெண், ஷீதல் சாதே!
ஷீதல் சாதே, இந்தியப் புவிப்பரப்பின், அம்பேத்கர் பூமியின் மிகவும் முக்கியமான பாடகி. "என் பாடல்களே என் எதிர்ப்பு வடிவம்!" என்று சொல்லும் இவரை, ஆனந்த் பட்வர்த்தனின் "ஜெய் பீம்" ஆவணப்படத்தைப் பார்த்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். உண்மையான வீரம், கேட்பவர்களின் எலும்புக்கூட்டை உலுக்கும் குரல் எனத் தனித்துவம் கொண்டது. இவர் மேடைகளில் பாடக்கேட்கையில் கண்ணீரும் வீரமும் ஊற்றெடுப்பதை உணராமல் இருக்கமுடியாது. இப்படியாக இந்தியா சினிமா பாடகர்கள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே மேடைப்பாடகர்களையும் போராளிப்பாடகர்களையும் கொண்டிருப்பதால் தான் இசை என்பதன் தத்துவம், எல்லா சாதி, மதம், பால், வர்க்க அடையாளங்களையும் அழிப்பதாகவும் இருக்கிறது. மராத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்காக அவர் பாடும் பாடல்கள் இங்கே. மொழி புரியாமலேயே உணர்வுகளைக் கடத்திவிடும் குரல். கம்பீரம். பெருங்கருணை. விழிப்புணர்வு.
https://sabrangindia.in/article/my-songs-are-my-protest-sheetal-sathe
நன்றி: sabrangindia
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-75638232037539974052016-02-03T10:00:00.001+05:302016-02-03T10:44:58.360+05:30தமயந்தியின் சிறுகதை உலகம் பற்றி பிரபஞ்சன்!
நடைபாதை ஓரத்தில் ஒரு பூ பூத் திருக்கிறது. நான் தினமும் நடக்கும் பாதை அது. நேற்று அது இல்லை. யாருக்காக அது பூத்துள்ளது? அந்த இருவருக்காக என்று தோன்றுகிறது. நேற்று சந்தித்து நட்புகொண்டு, நேசம் கொண்ட அந்த இருவருக்காக என்று நாம் நம்ப என்ன வழக்கு? பின் ஏன் பூக்க வேண்டும், பூ? அந்த இருவரின் சிநேகத்தில் மகிழ்ந்து அதைப் பாராட்டி வரவேற்கும் முகத்தான் அந்தப் பூ பூக்கிறது. உலகம் முழுக்க, மண் மேல் பூக்கள் ஆயிரம் ஆயிரமாய் ஏன் மலர வேண்டும்? அன்பின் நேச மனத்தைக் கொண்டாடத்தான். சரி. மலர்கள் ஏன் வாடி உதிர வேண்டும்? அந்த இருவர் ஒரு வரையொருவர் பகைத்துப் புண்படுத்தி விலகும்போதெல்லாம் மலர்கள் வாடுகின்றன. உதிர்ந்து போகின்றன.
மலர் உதிர்வது என்பது மனம் உதிர்வது. மனம் உதிரும்போதெல்லாம் பதைத்துப் போகிறார் தமயந்தி. ஏன் மனிதர்கள் பிணக்கு கொள்கிறார்கள்? இருவேறு தேசத்து ராணுவக்காரன் மாதிரி ஏன் பகைக்கிறார்கள்? பங்காளி கள் மாதிரி ஏன் வழக்கு பேசுகிறார்கள்? எதிரிகள் போல ஏன் வதை செய்ய வேண்டும்? சொற்களை எறிந்து ஏன் காயப்படுத்த வேண்டும்? புறக்கணிப்பு, அவமானம் என்பதெல்லாம் ஒரு கூரை யின் கீழ் தாம்பத்யம் என்ற பெயரில் நிலை பெற வேண்டும்தானா? தமயந்தி இந்தக் கேள்விகளோடு பயணம் செய்கிறார். எழுதும்போதும் இதையே எழுதுகிறார். எவையெல்லாம் அவரை இம்சிக்கிறதோ அவைகளை அவர் எழுதுகிறார். எனெனில் அவர் எழுத்தாளர்.
தமயந்தியை 1980-களின் கடைசிப்பகுதியில், அவர் கதைகளின் வழியே சந்திக்க நேர்ந்தது. அவசியம் படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதை முதல் சில சிறுகதைகளிலேயே நினைக்க வைத்தார். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது? வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வே போல எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே ஆவார்கள். அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும், வடிவ நேர்த்தியும், மொழி ஆளுமையும் தனித்வம் பொருந்தியவை.
அண்மையில் வெளிவந்திருக்கும் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ என்கிற தமயந்தியின் சிறந்த கதைகளைக் கொண்டிருக்கும் தொகுதியில் ‘முகம்’ எனும் கதை இப்படி ஆரம்பிக்கிறது:
‘காலைல எழும்பி முகம் கழுவிவிட்டு பல் விளக்கி வாய் கொப்பளிச்சிட்டு கண்ணாடி பார்த்து தலையைக் கோதலாம்னு பார்த்தப்பத்தான் முகத்தைக் காணோம்னு புரிஞ்சுது. சட்டுனு ஏதோ ஒண்ணு பதைபதைக்க இன்னொரு முறை கெளரி கண்ணாடிய உத்துப் பாக் குறா. கண்ணு, மூக்கு, உதடு, நாடி எதுவுமே இல்லாம வெறும் சதைக் கோளமா இருக்கிற முகத்தை பார்த் தாலே மிரட்சியா இருந்துச்சு. கண்ணே இல்லாம எப்படி பார்க்க முடியுதுனு சத்தியமா இவளுக்குத் தெரியல...’
தமயந்தி கதைகளின் மையம் அல்லது அகம் இப்படி இருக்கிறது. என்ன பண்ண? முப்பது நாளில் சிவப்பழகு பண்ணிக்கொண்ட பெண்ணைப் பற்றி, சீவி சிங்காரித்து வாசலில் ஸ்கூட்டர் சப்தத்தை எதிர்பார்த்து நிற்கும் குமாரிகள் பற்றி, நேத்திக்கு வாங்கின புடவைக்கு மேட்சாக பிளவுஸ் பிட் கிடைக்காத கவலையில் தோய்ந்த திருமதிகள் பற்றி எழுத நிறைய பேர்கள் இருக்கிறார்களே!
தமயந்தி, பெரும்பகுதி நிஜமானப் பெண்களின் பிரதிநிதியாக எழுத வந்து, நிஜமான பிரச்சினைகளை எழுதுகிறார்.
பிடிக்காத பாடத்தை எடுக்கச் சொல்லிப் பெண்களை வற்புறுத்தி காலேஜில் சேர்த்துவிட்டு ஆசைகளைக் கருகச் செய்த அப்பன்களை யார் எழுதுவது? கடைசி செமஸ்டர் முடிக்கும் முன்பாக ‘இவன்தான் மாப்பிள்ளை’ என்று ஒரு கேனயனைக் கொண்டு வந்து நிறுத்திய தந்தைமார்களை யார் எழுதுவது?
‘பக்கி மவள… தூரம் பட்ட துணியை பேப்பர்ல சுத்தி யாருக்கும் தெரியாம கொண்டு போடு’ என்கிற மாமியாரை யார் எழுதுவது.
‘கனவுல சில்வியா ப்ளாத் தினமும் வர்றா. பாதி புரியுற ஆங்கில கவிதைகளச் சொல்றா. ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு. ஒரு தடவ பாலாஜியோட லேப்டாப்ல சில்வியா ப்ளாத்னு அடிச் சோன்ன இணையதளம் விரிய ஆரம் பிச்ச நேரம், அவன் பின்னந்தலைல தட்டி ‘‘என்ன பண்ணிட்டு இருக்க... டிபன் எடுத்து வை’’ன்னான். சில்வியா ப்ளாத் அவன் சொன்னதை இணையத்துலேர் ருந்து பார்த்துகிட்டே இருந்தா. அவ முகம் மாறின மாதிரி தோணுச்சு கெளரிக்கு.
அவளுக்குப் பாட ஆசை. வாயைத் திறந்தால் ‘‘என்னடி கரையுற காக்கா மாரி’’ன்பான் அவன். அதான் அந்த கேன யன்தான். அவனின் இன்னொரு பெயர் கணவன், இந்த தேசத்தில். இவர்களைத் தொழ வேண்டும் பெண்கள். தொழும் பெண்கள், பெய்யென்றால் மழை பெய் யும். ஆமாம் பெய்யும். பெய்யெனச் சொன்னால் மாடுகூடப் பெய்யாதே!
தமயந்தி கோபக்காரர் எல்லாம் இல்லை. அவர் கோபம் சமூகம் சார்ந்த கோபம். அந்தக் கோபம், கலாபூர்வமாக மாறி சிறுகதை இலக்கியமாகவும் மாறுவதால், அற்புதமான நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துவிடுகிறது. வன் முறைக்கு - சகலவிதமான வன்முறை களுக்குமான எதிர்குரலை, கதைகளின் ஊடாகவும் உள்ளோட்டமாகவும் மாற்றி நல்ல வாசிப்புக்கு வடிவம் தருகிறார் அவர். விடுதலையைத் தமயந்தி அவர் கண்ணோட்டத்தில் முன் வைக்கிறார்.
ஓர் அழகிய கதை ஒன்றைப் பார்ப்போம். சமூக அக்கறையும் மனித நேயமும் கொண்ட அவள் செய்தி சேகரிக்கக் கிராமம் செல்கிறாள். வசந்தி என்கிற பெண் பேசுகிறாள். எங்கள் ஊருக்கு அருகில் ஒரு காடு. அது எங்களுக்குத் தாய். அதில் ஏதோ ஆராய்ச் சிக்கூடம் கட்ட நினைக்கிறது அரசு. பழனி அண்ணன் தலைமையில் ஊர் போராடுகிறது. போராட்டக்காரர்களைப் போலீஸ் கடுமையாகத் தாக்கிச் சிறை பிடிக்கிறது. தலைமறைவான பழனியண் ணனுக்குக் குடிக்க நீர் கொடுக்கிறது வசந்தி குடும்பம். மாபெரும் குற்றம் அல்லவா அது? பழனியைத் தேடி வந்த காவலர்கள், அவள் தந்தையைக் கொல்கிறார்கள். அவளை இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி… வசந்தியின் கர்ப்பப்பையே கிழிகிறது. வசந்தி தன் அனுபவத்தை கேட்பவள் மனம் பதறச் சொல்லிக்கொண்டு போகிறாள். இதனுடே, அந்த ஏழைக் குடும்பம் வெளிப்படுத்தும் விருந்தோம்பல் அற்புதமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவள், எழுந்து தரையில் அமரப் போகிறாள். அவசரமாகப் பாய் விரிக்கப்படுகிறது. ‘‘நீங்க கறி மீன்லாம் சாப்பிடுவீங்களா?’’ என்கிறாள் ஒரு பெண்.
இதற்கிடையில் செய்தி சேகரிப்புப் பெண்ணுக்குக் காதில் இன்னொரு குரல் - முரளியின் குரல் ஒலிக்கிறது.
‘‘ஊரு சுத்தப் போயிட்டியா?’’
கணவன்தான்.
‘‘ஊருக்கு நியாயம் கெடைக்கச் செய்வாளாம்... வீட்ல இட்லிகூட கெடைக்க வைக்க முடியலையே.’’ அலைபேசி சிணுங்கியது.
‘‘என்ன போனை எடுக்க மாட்டியா? உனக்கென்ன கவலை... நாங்க இருந்தா என்ன செத்தா என்ன? மெள்ள வா...’
டிராவல் பண்ணாதனு சொல்றாங்க டாக்டர். சனியன். லீவு போடறியா..? சாதாரணமா வத்தக் குழம்பு சுட்ட அப்பளம்னு உள்ள பொண்டாட்டியைக் கட்டியிருக்கணும்...
தட்டு இட்லியோடு பறந்தது...
வசந்தியின் கதையோடு, அதே தரத் தில் இன்னொரு, அதே வன்முறைக்கு ஆளான செய்தி சேகரிப்பாளர் கதையும் இணைகிற ரசாயனம் அருமையாக இணைந்த, தமிழில் முக்கியமான கதை இது.
அன்பைத் தேடி அன்பைத் தவிர வேறு எதுவும் புழங்காத ஓர் உலகத் தில் ஒரு குழந்தையாக அலைய விரும்புகிறார் தமயந்தி. கிடைத்திருக்கும் இந்த அழகிய உறவை, அழகிய வாழ்க்கையை ஏன் விகாரப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.
உண்மைதான். எத்தனை அழகியது இந்தக் குளிர் காலை, இந்த அருவி, இந்த நதி, இந்த நிலவு... இந்த அழகுகளோடு மனித குலம் ஏன் இணைந்துக்கொள்ளக் கூடாது என்கிறார் தமயந்தி. ஆமாம். ஏன் நாம் அழகாகக் கூடாது?
தமயந்தியின் ‘ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்’ சிறுகதை தொகுப்பை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- நதி நகரும்…
நன்றி: "தி இந்து"
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-26139976359184145212016-02-02T22:23:00.001+05:302016-02-02T22:26:50.010+05:30கடவுளை இல்லாமல் ஆக்கினேன்
எல்லாம் அறிந்தவனான ரோஹித்தும்
அந்த நீலக்கயிற்றின் சுருக்கில் தலையை இறுக்கிக் கொண்டான்
நட்சத்திரங்களைக் கண்களிலிருந்து உதிர்த்துவிட முடிவெடுத்தவன்
சில நட்சத்திரங்களைத் தந்து போகப் போராடினான்
செட்டைகளைத் தன் மீதே மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டான்
உடலுக்கும் இதயத்திற்கும் இடையே பயணம் தூரமாகிப் போக
அவன் சூரியனைத் தன் தலைமீதே சுமந்து நடந்தான்
விடுதலையின் பதாகை வானமாகி மேலே எழும்பிக் கொண்டேயிருந்தது
ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு
அவன் கனவுக்கோட்டை எதையும் வாங்கவிரும்பவில்லை
புதிய வீடும் சாளரங்களும் கட்டவிரும்பவில்லை
கடனும் பசியும் சில நூல்களும்
அவன் தனக்கான கூரையைத் தேடினான்
உயரமான கூரைக்கு ஏறிப்போக ஏணியைத் தேடினான்
ஏணியின் மீதேறும்போதெல்லாம் கூரை மேலெழும்பிச் சென்றது
எழும்பி மேலே சென்று கொண்டே இருந்தது
ஏணியின் தேவையின்றி கூரையின் கீழ் வாழ்ந்தவர்கள்
அவனுக்கு ஏணி அவசியமற்றது என்றனர்
ஏணியைப் பறித்து மடித்து உடைத்தனர்
கூரை உடையவர்களுக்கு ஏணி அவசியப்படாதவர்களுக்கு
கடவுள் எதுக்கென அவனை இல்லாமல் ஆக்கினேன்
(ரோஹித் வெமூலாவிற்கு)
குட்டி ரேவதி
(சென்னையில் சனவரி 24, 2016 அன்று, Pranjya ஒருங்கிணைத்திருந்த Zero Apologies கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்டது.)
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-24452491377615443702015-12-14T10:13:00.004+05:302015-12-14T10:16:04.518+05:30அது 'பீப்' பாடல் இல்லை; 'ஹேட்' பாடல்!
பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அது வெறுமனே ஒரு பாடலில் அல்லது சினிமாவில் 'கெட்ட வார்த்தையைப்'பயன்படுத்துதல் குறித்த உரிமை, கருத்துரிமை என்பதாகத் திசைதிருப்பப்படுகிறது. அநியாயம்.
அந்த 'பீப்'பாடல் ஒரு hate song. பெண் வெறுப்புப்பாடல். இலக்கியம், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளிலும் வியாபித்திருக்கும் பெண் வெறுப்பின் சீழ் தான் இப்படி அதிகாரத்துடன், மறைமுக இச்சையுடன், நமுட்டுச்சிரிப்புடன் வெளிப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் கலையாகவும் கலையுரிமையுடனும் ஒப்பிட்டு முழக்கமிடுவது என்பது செய்வதையும் செய்துவிட்டு அப்படிச் செய்யவில்லை என்பதான தப்பித்தல் தந்திரம் தான்.
இன்றைய சமூக ஆண்களிடம், தாய்ப்பாசம், அண்ணன் - தங்கைப்பாசம், தோழி, காதலியர் என்பதெல்லாம் அர்த்தமற்ற, உணர்வுகளற்ற வெற்று வார்த்தைகள். எல்லாமே Use & Throw.
காலங்காலமாக, கலை ஊடகங்களால் விதைக்கப்பட்டுவந்த 'ஆணாதிக்க' (அரதப்பழசான வார்த்தை தான்) பழக்கங்கள் தாம் இன்று அனிருத்தாகவும் சிம்புவாகவும் வெடித்திருக்கிறது.
பெண்கள் மீது குருட்டாம்போக்கில் அமிலத்தை வீசும் ஆண்களாய் இன்றைய தலைமுறை மாறிவிட்டதற்கு, அதிலும் எந்தக்குற்றவுணர்வுமில்லாமல் பொதுவெளியில் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டாக்கித் தந்ததற்கு, நம்முன் உள்ள எல்லா ஊடகங்களும் பொறுப்பு ஏற்கவேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள எந்த ஆணுக்கும் குறைந்தபட்ச அளவில் கூட பெண்கள் மீது மரியாதையோ அல்லது அது இல்லாதது குறித்த அவமானமோ இல்லை.
எங்கேயாவது அப்படி ஒன்றிரண்டு ஆண்கள், பெண்கள் மீது நன்னடத்தையுடன் நடந்துகொள்வதைப் பார்க்க நேர்ந்தால் வேறு கிரகம் வந்துவிட்ட உணர்வு எழுகிறது.
நண்பர்கள் எல்லோரும் சமீபத்திய பயணத்தில், டி.ராஜேந்திரரின் அண்ணன் - தங்கை பாசப்பாடல்களைக்கேட்டு சிலாகித்துக் கொண்டு வந்தோம்.
அப்படியான உறுதிப்பாடான பாடல்கள் இன்றைய வாழ்க்கையில் மிகவும் பொருத்தமற்றவையாகவும் தொடர்பற்றவையாகவும் ஆகிவிட்டதன் நவீன விடங்கள் தான் 'அனிருத் - சிம்பு'
உண்மையில், இதை எதிர்த்துப் போராடவேண்டியவர்கள் மற்ற ஆண்கள் தாம். இப்படியான பெண் வெறுப்புப் பாடல்கள் சமூகத்தில் மற்ற ஆண்களுக்கும் இழிவைச் சம்பாதித்துத் தருகிறது என்று நம்பினால் 'ஆண்கள்' தாம் தெருவிறங்கிப் போராடவேண்டும்.
திரைத்துறையில், 'அனிருத் - சிம்பு' தொடர்ந்து இயங்குவதைத் தடைசெய்யவேண்டும்.
இப்படியான 'பெண் வெறுப்பு' ஆண்கள் திருந்துவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, அவர்களுக்குப் பிறக்கும் மகள் மீது, இந்தச் சமூகம் செலுத்தும் வன்முறையைக் காண நேர்வது தான் என்பது எனது என்றென்றைக்குமான நம்பிக்கை.
ஆனால், அப்படியெல்லாம் நிகழ்வதற்குள் மற்றவர்களின் மகள்கள் மீதெல்லாம் கடுமையான வன்முறையை இவர்களே ஏவிவிட்டுவிடுவார்கள் போல. அதுவரை, நாம் காத்திருக்கவா போகிறோம்.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-11728307313594781732015-11-03T15:16:00.004+05:302015-11-03T15:17:57.734+05:30சாதி மீறிய காதல் என்றால் மயானத்தில் தான் போய் முடியும்!
MASAAAN - இரு காதல் உறவுகளுக்கு இடையே இருக்கும் சாதியச் சமன்பாடுகளைச் சொல்லும் படம். ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே உலவும் காதல் உறவுகளை இந்திய சினிமா அவ்வளவாகப் பொருட்படுத்தியதில்லை.
அப்படியே அவர்களின் கதைகளைச் சொல்ல முனைந்தாலும், 'ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கும் இடையே' என்று பத்திரிகையாளர்களைப் போலவே, இலை மறை காய் மறையாக, கடந்து செல்லும் தயக்கமும் அச்சமும் குழப்பமும் எப்பொழுதும் கதையில் தொங்கலாக இருக்கும். இந்திய சினிமாவின் பிதாமகன்கள் என்று சொல்லப்பட்ட சத்யஜித்ரே போன்றவர்கள் கூட, திரைக்கதையில் சாதியை ஓர் உட்பொருளாக வைத்துச்சொல்லும் அக்கறைகள் கொண்டாரில்லை.
அப்படியே சொன்னாலும் அவை, ஆதிக்கசாதியினர் மீது பரிவு கொண்ட, சாய்வு கொண்ட கதைகளாகிப் போயின. கெளதம் கோஷ், 'அந்தர்ஜாலி யாத்ரா' என்ற படத்தில், பார்ப்பன ஆணுக்கு இருக்கும் பலதாரப் பெண் வாய்ப்புகளை எள்ளிநகையாடியிருப்பார். அதன் உட்பொருளாய், 'இந்துமதக்கட்டுமானம்' எவ்வளவு சப்பைக்கட்டுகள் நிறைந்தது என்பதையும் திரைக்கதையின் கலைவடிவம் திரியாமல் சொல்லியிருப்பார்.
FANDRY, COURT மற்றும் TITLI போன்ற படங்கள் வரிசையில் MASAAAN திரைப்படமும் இந்திய சாதியமுறையின் இக்கட்டுகளை நேர்மை தவறாமல், மிகவும் கவனமாகச் சொல்கிறது. ஆயிரம் ஆயிரம் காதல் கதைகளைச் சினிமா வழியாகச் சொல்ல முயன்றாலும் பின்னணியில் இருக்கும் சாதிய வன்மங்களை எல்லாம் சொல்லும் வாய்ப்பை சினிமா எடுத்துக்கொள்வதில்லை.
MASAAAN படத்தில், காதல் உறவில் ஈடுபடும் ஆதிக்க சாதியினர், ஒன்று சாதிய அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் அல்லது, கொல்லப்படுகின்றனர். காதல் உறவில் நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்டவர்களோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாய் மரண விளிம்பிற்குத் தள்ளப்பட்டு ஆணிஅறைந்தாற்போல அங்கேயே இருத்திவைக்கப்படுகின்றனர்.
ஆனால், கதையின் முடிவில் எந்த மாற்றமுமில்லை. ஆதிக்கசாதிக்காதலர்களை பெற்றவர்களே கொன்றுவிடுவர். தாழ்த்தப்பட்ட காதலர்களையும் ஆதிக்கசாதியினரே கொல்வர். சாதியப்பிரமிடின் பின்னால் இருக்கும் மனித வன்மங்களை எந்த சமரசமும் இன்றி கலைவடிவம் பரவலாக பல திரைப்படங்கள் வழியாக முன்னேற்றிக் கொடுக்கையில் தான் இந்திய சினிமா சரியான வழியில் பயணிக்கும் என்று சொல்லலாம்.
ஆதிக்கசாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் இடையே காதல் உறவு என்றால் அது மயானத்தை நோக்கியே அழைத்துச்செல்லும் என்ற யதார்த்தம் சொல்லும் படம்.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-1243218564210060302015-10-23T10:10:00.000+05:302015-10-23T10:21:56.144+05:30ஒரு தமிழ்சினிமாவிற்கான நடிகை தேடும் படலம் இன்னும் ஓயவில்லை!
நம்பர் 1 நடிகைகள் யாரும் நம் சுயமான, அசலான கற்பனைக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பதில்லை. ஸ்மிதா பட்டேல், தன் 31 வயதுக்குள் ஒரு நடிகையாகச் செய்த சாதனைகள் அபாரமானவை. தான் நடித்த கலைப்படங்கள் வழியாகவும் வணிகப்படங்கள் வழியாகவும் இந்தியப் பெண் ஆளுமையையும் மனோபாவத்தையும் திரைக்குக் கொண்டு வந்ததில் இவர் ஒருவருக்கே முதன்மையான இடம் என்று சொல்லலாம். இருவகை சினிமாவையும் தன் ஒட்டுமொத்த ஈடுபாட்டால் நேர்மையாகக் கையாண்டவர், ஸ்மிதா பட்டேல்
ஆனால், இன்று இந்தியப்பெண்களின் உளவியலை சற்றும் தொடாத வணிகப்படங்களுக்கு இடையே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். தமிழ்ப்படங்களின் நிலை இன்னும் அவலமானவை. இன்றும் தமிழ்ப்படங்களில் நடிக்க, தமிழ் பேசத்தெரிந்த, தமிழ் சமூகவியலை அடிப்படை அளவிலேனும் உணரக்கூடிய, உடலிலும் உடல் மொழியிலும் பன்முகப்பெண் ஆளுமையை ஏற்கக்கூடிய, நம் வெயில் காய்ந்த தோலின் நிறமுடைய, நடிப்பு என்பதன் சிறுமைகளை மீறி ஓங்கி நிற்கக்கூடிய நடிகைகளுக்குப் பஞ்சம் தான். இத்தகைய தேவைகளுக்கெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே மைல் கல், ஸ்மிதா பட்டேல் தான்.
முதல் விடயம்: தமிழ்ச்சமூகத்திலிருந்து தமிழ்க்குடும்பங்களிலிருந்தெல்லாம் பெண்களை நடிப்புத்துறைக்கு அனுப்புவதில்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் இழிவான ஒரே வார்த்தை, அது 'கூத்தாடி'த் தொழில் என்பதே. உண்மையில், திரையில் மற்றும் திரைத்துறையில் ஒரு பெண் நடிகையாக இயங்குவதற்கு பெரும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவ்வாறு இருப்பதற்கான சவால்கள் சகமனிதராகக் கூட, நாம் இன்னும் அறியாதவை. அதன் உடல் அரசியலும் எதிர்கொள்ளவேண்டிய ஆண்மைய புரிதலும் வேறு எந்தத்துறையை விடவும் அதிகமானவை. பெண் உடல் அரசியலை முழுமைப்படுத்தும் பெண்ணியமும் பெண்உரிமையும் அங்கே தான் முளைத்துவர வேண்டியிருக்கிறது.
இரண்டாவது விடயம்: ஒரு பக்கம் நடிகையை இழிவுபடுத்திய படியே, அவர்களை மிகையான வெளிச்சத்தில் நிறுத்திவைக்கும் வணிக ஃபார்முலாக்களின் அங்கமாகவும் நாம் தான் இருக்கிறோம். இன்று, நமக்கு (எனக்கு)த் தேவை, ஸ்மிதா பட்டேல் போல ஒரு நடிகை. முழுமையான மனவெழுச்சியும் தொழில்சார்ந்த அக்கறையும் உள்ள பெண்களை மற்ற மொழிகளிலிருந்து கண்டிப்பாக இறக்குமதி செய்யமுடியாது. வணிகமும், அங்கீகாரமும், சிந்தனையும் மொழி சார்ந்ததாக இருக்கும்பொழுது 'பாவனை'யை மட்டும் மற்ற மொழிநடிகைகள் வழியாக எப்படி இறக்குமதி செய்யமுடியும்?
நம் வெப்பப்பிரதேசத்தின் கனன்ற தோல் கொண்ட, கருத்த முடியும் பெரிய, கூர்மையான விழிகளும் கொண்ட, நம் ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் மீதான பரிவைக் கொண்ட நடிகை யாராக இருந்தாலும் அவர் அடுத்த 'ஸ்மிதா பட்டேல்' ஆகக்கடவர். ஸ்மிதா பட்டேலின் பெருமைகளைப் பேசிப்பேசியே, அங்கேயே பெண் நடிப்பின் சவாலை நிறுத்திவிடமுடியாது. தமிழ்த்திரைத்துறை ஒவ்வொரு நடிகை வழியாகவும் நிறைய கற்பனைகளையும் புனைவுகளையும் முன்வைக்கத் தயாராக இருக்கிறது.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-32721049450017554242015-05-28T22:38:00.001+05:302015-05-28T22:38:23.064+05:30அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி
அரசியல்வாதி, சினிமாவாதி, இலக்கியவாதி என எல்லா வகையான கேரக்டர்களுக்கும் பொருத்தமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே நடிகன் 'வடிவேலு' என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா?
ஒவ்வொரு அரசியல், சினிமா, இலக்கிய ரியல் கேரக்டருக்கும், வடிவேலுவின் ஒவ்வொரு சினிமா கேரக்டர் பொருந்திப்போகிறது!
இதை, பப்ளிக்ல அவிழ்த்து விட்டா, எப்பவும் போல ' வடிவேலுக்கு'த்தான் செம அடி விழும். அதனால, அடக்கமா வச்சிக்குவோம். tongue emoticon
குட்ட
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-33799771619715350812015-05-28T22:36:00.005+05:302015-05-28T22:36:51.582+05:30கேரளநாடும் தமிழ்நாடும்
கேரள நண்பர் ஒருவரிடம், நலம் விசாரிப்பாகத்தான் கேட்டேன்.
'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று.
'கேரள நாட்டை எப்படி தனியாகப் பிரிப்பது என்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.'
'செய்யுங்கள். எங்களுக்கும் வசதியாக இருக்கும்!' என்றேன்.
'இப்படியான மோடி ஆட்சி தொடர்ந்தால், நாம் விரும்புவதெல்லாம் சில வருடங்களில் சிரமமின்றித் தானாகவே நடந்துவிட வாய்ப்பிருக்கிறது!' என்றாரே பார்க்கலாம்.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-67555016577321078622015-05-28T22:35:00.001+05:302015-05-28T22:35:35.799+05:30தனிமை
தனிமையும் மகிழ்ச்சியும் ஒன்றாக வாழ்வதில்லை.
ஆனால், தனிமையும் நிம்மதியும் ஒன்றாகத்தான்
உறங்குகின்றன.
காதல், தனிமையை விரும்புவதில்லை.
தனிமை, காதலை எதிர்ப்பதில்லை.
தனிமைக்கு நாவுகள் கிடையாது என்று நம்புகிறோம்.
நம்முடன் பேசுவோரின் நாவுகளை எல்லாம் கடன் வாங்கிவருகிறது, தனிமை.
தனிமைக்குக் கடிகார முட்கள் கிடையாது.
காலத்தின் தோழி, எப்பொழுதும் தனிமை தான்.
எலும்புகளில் உறைந்திருக்கிறது தனிமை.
எலும்புகளைத் தசையுடன் தின்னும் மண்ணாக வருகிறது காலம்.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-57355595405667768512015-05-28T18:41:00.001+05:302015-05-28T18:41:20.624+05:30நவீன இலக்கியவாதிகள் யார்?
இன்று காலை இரண்டு இலக்கியவாதிகள் என்னை அழைத்தார்கள்.
சீரியசான இலக்கிய நிகழ்வு ஒன்று வடிவமைக்கவேண்டும், பத்து இலக்கியவாதிகளின் பெயர்களைத் தரமுடியுமா என்று கேட்டார்கள்.
நான் சொன்ன பெயர்களையெல்லாம் கேட்டு,
'இவர்களை எல்லாம் எப்படி இலக்கியவாதிகள் என்று சொல்கிறீர்கள்?' என்று அதிர்ந்தார்கள்.
ஏன்,
ரவுடித்தனம் செய்பவர்கள், சாதிக்குறியீடுகள் - சடங்குகள் செய்பவர்கள், குரு - சீடர் வழிபாடு கொண்டவர்கள், விருதுகள் பெற்றவர்கள், தன் பெயரில் விருதுகள் வழங்குபவர்கள், வெளிநாடு சென்றவர்கள், தொலைக்காட்சியில் தொடர்ந்து பேசுபவர்கள், யாரையேனும் புகழ்ந்துகொண்டே இருப்பவர்கள் அல்லது ஒருவரையேனும் அவதூறுசெய்தவர்கள், வீடு புகுந்து அடித்தவர்கள், ஃபேஸ்புக்கில் 500 லைக்குகளுக்குக் குறையாதவர்கள், பொதுவெளியிலும் எழுத்திலும் பெண்களை இழிவாகப் பேசுபவர்கள், புத்தகக்கண்காட்சியின் முகப்பில் ஆளுயரத்தட்டி வைத்தவர்கள்.....
இவர்கள் பெயரைச் சொன்னால் தான் 'இலக்கியவாதி' என்று ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதும்,
கப்-சிப் என்று பெயர்ப்பட்டியலை வாங்கிக்கொண்டு ஃபோனை வைத்துவிட்டார்கள்.
ஃபோனைத் துண்டிக்கும் முன், சென்னை வந்தால், உங்களை நேரில் சந்திக்கமுடியுமா என்றும் கேட்டுவைத்தார்கள்.
பயமில்லாதது போல் காட்டிக்கொண்டாலும், கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. tongue emoticon
கு
கு
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-949576706130672252015-05-28T18:36:00.004+05:302015-05-28T18:40:34.156+05:30வீடு என்றால் அது மரத்தடியாக இருக்கவேண்டும்!
எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளது என்றாலும் கிழக்கிலும் மேற்கிலும் சில மரங்கள் வீட்டின் சுவர்களைத் தழுவிக்கொண்டிருக்கின்றன. ஒரு மாமரம், இரு தென்னைமரங்கள், வில்வமரம், வேப்பமரம் என. பக்கத்துவீட்டில் இருக்கும் மரங்களும் எங்கள் வீட்டுச் சுவர்களில் சாய்ந்து கொள்கின்றன.
பத்துவருடங்களாக, சுற்றிச்சுற்றி இந்தப்பகுதியிலேயே நாங்கள் வீடு தேடி இருப்பதற்குக் காரணம், இங்கு போல் கோடம்பாக்கத்தின் வேறெங்கிலும் குறைந்த சுற்றில் அதிக மரங்கள் இல்லை. அத்தி, ஆல், அசோகமரம், மாமரங்கள், புங்கமரங்கள், வாகை மரங்கள். பன்னீர் மரங்கள், வாதாம் மரங்கள் இன்னும் பலவகையான காட்டுமரங்களும் கூட. குறுங்காடு போல் இருக்கும்.
ஐந்து வருடங்களுக்கு முன் இன்னும் அதிகமான மரங்கள் இருந்தன. அதிக மழையில் கால் ஊன்றி நிற்க முடியாத சிமெண்ட் தளங்களினால் அவை தலைசரிந்தன.
நாங்கள் கோடையின் வேதனையை முறையிடுவதை மறந்து இருக்க, இந்த மரங்களின் அன்பு தான் காரணம். வருடத்திற்கு வருடம், கோடை உக்கிரமெடுக்கிறது. அனலாகிறது. சில வேப்பங்கன்றுகளை நட்டாலே, வேகமான அதன் வளர்ச்சியால், இரண்டாவது வருடமே நாம் நிழலும் குளுமையும் பெறக்கூடும்.
ஆனால், மனிதனின் சிறப்பான குணம், குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. குற்றத்தைக் கண்டறிந்து நீக்குவது இல்லை என்பதை உணர, 'கோடை' எளிய முன்னுதாரணமாகிறது.
பகல் பொழுதுகளை வீட்டிற்குள் வேலை செய்தும் எழுதியும் படங்கள் பார்த்தும் கழித்து விட்டு, சந்திப்புகளையும் வெளிவேலைகளையும் மாலைகளில் வைத்துக் கொள்கிறோம்.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-31631708882465792542015-05-23T14:30:00.000+05:302015-05-23T14:30:00.447+05:30புனைவு என்பது......
புனைவுகளுக்குப் பின் நிறைய காரணங்கள் இருக்கின்றன.
புனைவுகள் உண்மைகளை மெய்ப்பிப்பதற்காக, வருவதில்லை. பொய்களையும், கற்பனைகளையும் இட்டு நிரப்பவும் அவை முயற்சிப்பதில்லை. மனிதனாகக் கிடைத்த வாய்ப்பில், இந்தப் பிரபஞ்சத்தையும் சிந்தனைகளையும் எவ்வளவு தூரத்திற்கு நுரையீரல் வெடிக்க ஊதிப்பருக்கவைக்கமுடியும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.
யதார்த்தத்தை அப்படியே கிழிப்பதிலோ, கீறல்கள் ஏற்படுத்துவதிலோ புனைவுகளுக்கு அக்கறை ஏதும் இல்லை. பட்டுத்துணியின் உராய்வில் சதை மீது பரவும் கணநேர மின்சாரம் போன்ற உணர்வைச் செயல்படுத்திச் செல்கின்றன.
ஆகச்சிறந்த கதை என்று பிரசுரமாவதை எல்லாம், இதழ்களில் குப்பையாக்கிச் சாதிக்கும் தருணங்களில், மனித மனங்களின் உன்னதம் என்பவை யாதாக இருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
உன்னதம் என்றால், புனிதம் மட்டுமே இல்லை. அழுக்கையும் வலியையும் சீழையும் துயரநொதியையும் எந்தத் திறனால், ஒரு தனிமனிதன் சரியாகச் செரித்துக்கொள்ளமுடிகிறது என்பதுவும் தான். உன்னதம் என்றால் புனிதம் இல்லை. உடலின் அகநோக்கங்கள், பிரபஞ்சத்தின் எல்லைகளையும், காலமுடிவுகளையும், மனிதவரையறைகளையும் மீறியவை. தன்னையே, தன் உடல் வழியாகக் கடந்து செல்ல முடியும் வீரம்.
எங்கே இப்படி ஒரு புனைவு எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-12262466393568145792015-05-22T21:34:00.001+05:302015-05-22T21:34:57.323+05:30புறம்போக்கு என்கிற பொதுவுடைமை - இது, பட விமர்சனம் அன்று!
இப்படம் குறித்து விவாதிக்கவும் விரிவாக உரையாடவும் நிறைய அரசியல் விடயங்கள் உள்ளன. அதற்கு வேறு சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஆனால், படம் தொடக்கம் முதல் முடிவு வரை எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது, பெண் இயக்கவாதியையும் உடன் செயல்படும் போராளிகளையும் காட்டியிருக்கும் விதம் தான்.
தமிழகம், பல வகையான சமூக அரசியல் இயக்கங்களையும், அதில் தீவிரமாக ஈடுபட்டு பல மாற்றங்களை சாத்தியப்படுத்திய பெண் செயல்வீரர்களையும் களம் கண்டது. அதற்கான, சமீபத்திய அனுபவமும், சாட்சிகளும் கூட நிறைய உண்டு.
இயக்கங்களுக்குத் தம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த நிறைய பெண்களையும் அவர்களின் தீவிரத்தையும் நான் அறிவேன்.
இயக்குநர் ஜனநாதனே கூட, இவ்வியக்கங்களையும் போராளிகளையும் நன்கு அறிந்தவர்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும், போராளிகளிடம் காணப்பட்ட உடல்மொழியும், உரையாடலும் அந்நியத்தன்மையையும் சங்கடத்தையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. கதையின், படத்தின் நோக்கத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
தமிழக இயக்கங்களின் சமூக உழைப்பை, மக்களிடம், ஊடகங்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.
தமிழகத்தின் பெண் போராளிகள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டார்களா, அவர்களின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.
சமூகப்பொறுப்புணர்வு என்பது வெறும் நடிப்பினால் மட்டுமே வெளிப்படுத்திவிடக்கூடிய ஒரு விடயமில்லை போல!
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-52894592663998010102015-05-22T21:29:00.000+05:302015-05-22T21:30:08.680+05:30பத்தாம்வகுப்பும் சீனிவாசனும்!
அப்பொழுதே எனக்கும் 'சீனிவாசன்' என்ற பெயருக்கும் ஆகாது. எட்டாம் வகுப்பு வரை என்னுடன் சீனிவாசன் என்றொரு பையன் படித்தான். இருவரும், திருச்சி, கைலாசபுரம் Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தோம். என் வாழ்வின் பொற்காலம் அந்தப் பள்ளியில் படித்த காலமே.
மாணவ, மாணவியருக்கிடையே பாரபட்சம் காட்டாத பள்ளி. என் தந்தையோ, தாயோ எதன்பொருட்டு ஆசிரியர்களைச் சந்தித்தாலும், அப்படியானதொரு மரியாதையுடன் நடத்தப்படுவர். சீனிவாசனுக்கும் எனக்கும் வகுப்பில் கடுமையான போட்டி இருக்கும். எவ்வளவு தான் முயன்றாலும், என்னைவிட சில மதிப்பெண்களேனும் அதிகமாகப் பெற்றுவிடுவான். வகுப்பில் முதலாவதாக, வந்துவிடுவான். படிப்பைத்தவிர, வேறு எதிலும் கவனத்தைச் சிதறடிக்காதவன்.
அந்தப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை தான் என்பதால், ஒன்பது, பத்தாம் வகுப்புக்கல்விக்கு நான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அவனும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டான். இடையில், இருவரும் சந்திக்கும் வாய்ப்பே இல்லையென்றாலும், பத்தாம் வகுப்பில் அவனை முறியடிப்பது என்பதே என் இலக்காக இருந்தது.
பத்தாம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வந்து இருவரும், ஒரே நாளில், Y.W.C.A மெட்ரிக்குலேசன் பள்ளியின் தலைமை ஆசிரியை ரூபி கனகராஜுக்கு, இனிப்பு வழங்கச் சென்றிருந்தோம். மொத்த மதிப்பெண்ணில், அவனை விட ஒரு மதிப்பெண் நான் அதிகமாகப் பெற்றிருந்தேன்.
தற்செயலாக, இது நினைவிற்கு வருகிறது. இன்று இது பொருளற்ற ஒன்றாக இருந்தாலும், நினைத்துப்பார்க்க இனிமையாக இருக்கிறது. இந்த அனுபவத்தின் இனிமை, சீனிவாசனைப் பற்றியது என்பதை விட, அந்தக் குறிப்பிட்ட பள்ளிவெளியுடன் இணைத்து சீனிவாசனை நினைத்துப் பார்ப்பது தான்.
அந்தப்பள்ளியில் பெற்ற நிழலையும் குளுமையையும் நம்பிக்கையையும் உடைமை உணர்வையும், பின் எந்தக்கல்வி நிறுவனத்திலும் என்னால் உணரமுடிந்ததே இல்லை.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-24537712487270114682015-05-20T12:59:00.002+05:302015-05-20T12:59:35.909+05:30அருண் ஷான்பாக்
அருண் ஷான்பாக் பற்றி நிறைய பதிவுகள். எல்லாவற்றையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே அழுகாச்சிப் பதிவுகள். கொஞ்சம் எரிச்சலாகவும், சங்கடமாகவும் கூட இருக்கிறது.
ஒரு பெண்மீதான பாலியல் வன்முறையை கூட, இன்னும் நாம் சரியாக அலச, ஆராயக் கற்றுக்கொள்ளவில்லை.
பிரச்சனை இது தான்: தனி நபர் மீதான பிரச்சனையாக, தனி நபர், ஒரு பெண்ணின் மீது காட்டிய வன்முறையாக மட்டுமே பார்ப்பதால் தான், இது இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது. ஒரு குறுகிய பார்வையுடனேயே முடிந்துபோகிறது.
இந்தப்பிரச்சனையை, நாளுக்கு நாள், மிகவும் தவறான இடத்தில் இருந்து கொண்டே பார்ப்பதால், இந்த வன்முறையும் நாளுக்கு நாள் அதிகமாகத் தான் போகிறது.
இந்த சிஸ்டம் அப்படி. சாதிய ஏற்றத்தாழ்வுகளால் விளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வன்முறையை வெளிப்படுத்தும் எல்லா தூண்டுதல்களையும் கொண்டிருக்கிறது.
'எந்த வகையிலும் வன்முறை கூடாது!. ஏனெனில், இந்தியா என்பது அகிம்சை இந்தியா' இதுவே ஒரு புரட்டு.
வன்முறை கூடாது, ஆனால், வன்மங்களை அமைதியான, திட்டமிட்ட நடவடிக்கைகள் வழியாகச் செயல்படுத்தலாமாம். இது, வன்முறையினும் கொடுமையான வன்முறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
சிந்தனைகளில் வன்முறை இருக்கலாம், செயல்களில் இருக்கக்கூடாதாம்.
ஊதிப் பெரிதாக்கப்பட்ட வன்முறைகள் மீதே நம் பரிவும், அக்கறையும் குவிவது என்பது, மனிதனின் வாயூரிஸ்டிக் மனநிலையின் எதிரொளி தான்.
உண்மையில், அருண் ஷான்பாக்கை விட, 'வெஜிடபிள்களாக' இலட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் வாழ்ந்து மடிகின்றனர்.
அருண் ஷான்பாக்கின் விடயத்தில், அறம் மீறாமல் இருக்க அந்த மருத்துவமனை முயன்றது ஒரு சிறப்பான நிலைப்பாடு.
ஆனால், இது வெறுமனே ஆண் X பெண் பிரச்சனை என்று பார்ப்பது ஓயாதவரை, பிரச்சனைக்கும் தீர்வில்லை. இப்படி, 42 வருடங்கள் ஒரு பெண்ணை 'வெஜிடபிளாக' வைத்துக்கொள்வதும் தீர்வில்லை.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-20091179515956197552015-05-02T15:34:00.000+05:302015-05-02T20:27:35.670+05:30“பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!” மு.வி.நந்தினி
http://mvnandhini.com/2015/04/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
மு.வி. நந்தினி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-81341218328261439672015-05-02T15:28:00.000+05:302015-05-02T15:28:10.153+05:30நேபாள பூகம்பம்
திருச்சி வந்திருக்கிறேன். அம்மா முழு நேரமும் வானொலியின் அருகில் அமர்ந்து செய்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேபாளம் குறித்த செய்திகளை, கவலையுடனும் அக்கறையுடனும் கேட்கிறார்.
தற்செயலாகத் தான் நாம் எல்லோரும் உயிருடனும், நம் உறவுகளுடனும் இருக்கிறோம் என்பதை உணரநேரும்போது இப்பூமியில் நம் வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையும் புரிகிறது.
நேபாளத்தின் சில வீடியோ பதிவுகளைக் காண நேரிட்டது. இந்தப்பூமியில், இந்தக்காலக்கட்டத்தில் வாழ, மனிதனுக்கு அசாதாரணமான துணிவு வேண்டும் என்று தோன்றுகிறது.
இதையெல்லாம் அறிந்தாலும், மனிதன் மாறுவதாக இல்லை. இலட்சோப இலட்ச வருடங்கள் மனிதனை ஆட்கொண்ட, அடிமைகொண்ட மனித மரபணுக்களின் குரல்களைப் பரிசீலிக்க அவனால் முடிவதே இல்லை.
தன்னைத் தவிர எதுவுமே முக்கியமில்லை என்று நம்புவது இந்தக்காலத்தில் எவ்வளவு முட்டாள்தனமான நம்பிக்கை என்றும் தோன்றுகிறது.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-48869411119251038452015-05-02T15:23:00.003+05:302015-05-02T15:23:48.380+05:30காற்றுவெளிப் பாடல்கள்
முன்பதிவு எதுவும் செய்யாமல், அன்று ஓடிப்போய் பேருந்தைப் பிடித்தேன். கோடை விடுமுறை என்பதால், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. பொதுவாக, ஸ்பீக்கர்களில் பாடல்களை அலறவிடும் பேருந்துகளில் ஏறுவதில்லை. பயண அமைதியை விலை கொடுத்துக் கெடுத்துக்கொள்ளவேண்டாமே என்று நினைப்பேன்.
அந்தப்பேருந்தில், பழைய திரை இசைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. குறிப்பாக, கேவி மகாதேவன், எம்எஸ் விசுவநாதன் ராமமூர்த்தி முற்காலப்பாடல்கள். வாகன ஓட்டுனர், தேர்ந்த இசை ரசனையுடன் பாடல்களைக் கோர்த்திருந்தார். ஒவ்வொரு பாடலின் வரிகளையும் இசையையும் அவை தரும் உணர்வுகளையும் ரசித்தபடியே, முந்தைய நாள் பெய்த மழையில் நிலம் வீசும் குளிர்க்காற்று பரவ, கேட்கக் கேட்க புதுமையாக இருந்தது. கருமையான இரவிற்கு, நட்சத்திரப்பந்தல் இட்டது போன்ற இரவு. எவ்வளவு நேரம் விழித்திருந்தேன் என்றே தெரியவில்லை.
ஏஆர் ரஹ்மானிடம் பணிபுரியத்தொடங்கிய பின்பு, வெளியாகும் அத்தனை பாடல்களையும் அப்பாடல்களில் பதிவாகும் புதிய பண்பாட்டுச்சொற்களை அறிவதற்காக ஒரு முறையேனும் கேட்டுவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன். மற்றபடி, காதுகளில் ஒயர்களைத் தொங்கவிட்டுப் பாடல்களைக் கேட்கும் வழக்கம் கிடையாது. கவிதைகள் வழியாக மொழியை நுகரமுடியும் அளவிற்குப் பாடல்களில் வாய்க்கவில்லை.
எங்கள் வீட்டில், கஜல் மற்றும் விதவிதமான நுட்பமான இசை கொண்ட பாடல்களைக் காலையிலேயே சீனி ஒலிபரப்பத்தொடங்கிவிடுவதால், அதுவே போதுமானதாக இருக்கிறது. தமயந்தியின் சிறுகதைகளில், ஆங்காங்கே இளையராஜாவின் பாடல்கள், மிகையின்றி கதாபாத்திரங்களின் குணாம்சங்களுடன் கலந்து வருவதை, தேநீர் அருந்தியபடியே புத்தகம் வாசிப்பதைப் போல ரசிக்கலாம்.
இந்தப்பேருந்து அனுபவம் தந்த உணர்வுகளையே, வங்காள மூலத்தில் மைத்ரேயி தேவி எழுதிய 'கொல்லப்படுவதில்லை' நாவலிலும் உணர்ந்தேன். மிக அருமையான பெண் மன ஓட்ட நாவல். மையமான பெண்கதாபாத்திரம், தாகூரின் மொத்தமான கவிதைகளையும் வாசித்து ரசித்து, எழுபது வயது தாகூருடன் உரையாடும் அனுபவம் பெற்றவள். அந்நாவலை வாசிக்கும் போது, அந்தப்பெண்ணிற்குப் போலவே, கடுந்தேனின் இயல்புடைய தாகூரின் கவிதைச் சொற்கள் நம் உடலில் ஊர்ந்தேறுவதை உணரமுடிகிறது.
இப்படியாக, கவிதைகள், பாடல்கள் உடலெங்கும் ஏறிப்படரும் அனுபவம், திரை இசைப்பாடல்கள் மிகையான போற்றுதலாலும், மிகை நுகர்தாலும், புறக்கணித்தலாலும் கிடைக்காமல் போகின்றனவோ என்று தோன்றுகிறது.
கர்நாடக இசை, ஆதிக்க இசையாக எல்லா கலைவெளிகளிலும் இடம் பிடிக்க முண்டியடித்தாலும், நம் தமிழ் திரை இசை தான், நம் எதிர்ப்பு இசை. காடுமேடெல்லாம், வெட்டவெளியெல்லாம், சேரிகளிலெல்லாம், மலைமுகடுகளிலெல்லாம் சளைக்காமல் கடந்து சென்று சேர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனாலென்ன, அகம் அல்லது புறம் என்ற பாங்கில் அவை இருமுனைப்பாடல்களாக இருக்கின்றன. அதன் வடிவ பலத்திற்கேற்ற்றாற் போல, நாம் இன்னும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஒன்றைத் தெளிவாக்கிக் கொள்கிறேன், கவிதைகள் வேறு, பாடல்கள் வேறு. கவிதைகளைப் பாடல்களாக்கும் முயற்சியும் வேறு.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-26473840516310962952015-04-23T22:15:00.003+05:302015-04-23T22:15:54.882+05:30'தி இமிடேஷன் கேம்' - கடிக்கப்பட்ட ஆப்பிளும் ஹோமோசெக்சுவலின் வரலாறும்!
இரண்டாம் உலகப்போரின் பொழுது, கணிதவியலாளன் ஆலன் டூரினின் அசாதாரண செயலை அவருடைய வாழ்க்கையினூடாகப் பார்க்கும் ஒரு படம். ஹோமோசெக்சுவலாக இருந்த ஆலன் டூரின், ஹிட்லர் போருக்குப் பயன்படுத்திய குறியீடுகளின் அர்த்தங்களை ஆராய்ந்து கண்டறிந்ததே, இந்தப்படத்தின் ஒட்டுமொத்தக்கதை.
கதையினூடாக, ஆலன் டூரினின் வாழ்வும், ஹோமோசெக்சுவலாக இருந்ததால் உண்டான போராட்டங்களும் சொல்லப்படுகிறது. அதேசமயம், இந்த நூற்றாண்டின் மனிதக்கண்டுபிடிப்புகளில் முதன்மையானதும் முக்கியத்துவம் உடையதுமான, கணினி உருவாக்கத்தில் ஆலன் டூரினினின் பங்கு முழுமையும் இந்தப்படத்தின் வழியாக உணரப்படுகிறது.
நாஜிக்களின் படைகள், பிரிட்டன் மீது எங்கு எவ்வாறு குண்டுகள் இடப்படவேண்டும் என்பதை, குறியீட்டுத்தகவலாகப் பரிமாறிக்கொண்டிருந்த பொழுது, அந்தக் குறியீடுகளைப் பிரித்து அறியும் சாதனையைச் செய்கிறார், டூரின். இந்தத்தனிமனிதரின் செயலால், இரண்டு வருட காலப் போர் குறைப்பு நிகழ்ந்ததாகவும், லட்சக் கணக்கான மக்களின் உயிரும் வாழ்வியலும் பாதுகாக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். ஒரு மனிதனின் அறிவு, வரலாற்றையும் அரசியலையும் நல்வழியில் புரட்டிப்போடமுடியும் என்பதற்குக் காலகாலமான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது, ஆலன் டூரினின் வாழ்வு. ஒரு தனிமனிதனின் பாலியல் போராட்டமும், அறிவார்ந்த சவாலை எதிர்கொள்ளும் விதமும், இருபக்கக் கதைகளாக இப்படத்தில் விரிகின்றன.
அப்பொழுது, பிரிட்டனில், ஹோமோசெக்சுவலாக இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆலன் டூரினின் பாலியல்பின்புலம் அறியநேர்ந்த அரசு, அவருடைய சாதனைகளையும் மறந்து சிறை தண்டனை அல்லது, ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்ணய ஹார்மோனை உடலுக்குள் செலுத்துதல் என்ற இரண்டு தண்டனைகளைப் பரிசீலித்தபொழுது, ஆலன் டூரின் ஹார்மோனை உடலுக்குள் செலுத்தும் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், குறைந்த காலத்திலேயே அவர் நஞ்சூட்டப்பட்ட ஆப்பிளைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் அல்லது, அது சயனைட் தடவப்பட்ட ஆப்பிளை தற்செயலாகக் கடிக்க நேர்ந்ததில் நிகழ்ந்த விபத்து என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. ராணி எலிசபெத், அவரது ஹோமோசெக்சுவல் அடையாளத்தைத் தண்டித்ததற்காக, மரணத்திற்குப் பின்பான அரசு மன்னிப்பை அறிவித்தார்.
இன்று புகழ்மிக்க, ஆப்பிள் மற்றும் ஐஃபோன்களின் லோகாவாக இருக்கும், 'கடிக்கப்பட்ட ஆப்பிள்' என்பதை ஸ்டீவன் ஜாப்ஸ், ஆலன் டூரின் இறக்கக் காரணமான அந்த நஞ்சூறிய ஆப்பிளிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்ற தகவல் உண்டு.
கணிதவியலாளன் ஆலன் டூரினின் வாழ்வு, ஒரு கவிஞனின் வாழ்வைப் போன்றே குறியீடுகளுடனும் வெளிப்படையான அரசியலுடனும், அறியாமைகளுடனும் இருப்பதாக உணர்ந்தேன். இந்தப்படத்தில், கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், சூழும் சமூகப் பாதிப்புகளை எல்லாம், தன் மார் மீதே வாங்கிக்கொள்ளும் ஒரு கலைஞனாக ஆலன் டூரின் நிமிர்ந்தெழும் பரவசத்தைப் படம் காணும்பொழுது உணரமுடியும்.
அதே சமயம், ஒரு சரியான சினிமா எப்படி தன் கலைவாய்ப்பை ஒரு சாக்காகக் கொண்டு, மனிதஇனத்தின் சாதனைகளையும் அவற்றின் துல்லியங்களையும் அழகாகப் பதிவுசெய்துவிடுகிறது என்பதையும் இப்படத்தில் உணரமுடிகிறது.
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-16450418845910736992015-04-23T22:13:00.003+05:302015-04-23T22:13:53.092+05:30சினிமாவை எவரும் விமர்சிக்கலாம்!
தமிழ் சினிமாவின் சமூகத்தாக்கம் அளவிடமுடியாதது. இன்னும் சொல்லப்போனால், சமீப காலங்களில், அது சமூக மையம் நோக்கித் தன்னை வேகமாக நகர்த்திக்கொண்டு வரும் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு நிரந்தரமில்லாத கொந்தளிப்பான நிலையில், இன்னும் முடிவெடுக்க முடியாத ஒரு தத்தளிப்பான, தன்னை சீரமைத்துக்கொள்வதற்கான நிலையில் இருக்கிறது.
மேட்டுக்குடித்தன்மையையும் மேல்சாதியாதிக்கத்தையும் சரளமாகக்கொண்டிருந்த பழைய சினிமா போக்கிலிருந்து நகர்ந்து, பாமரனின், ஒடுக்கப்பட்டவனின் குரலாக, நவீனத்தின் அடையாளமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இதில் பல தனிமனித கலைமுயற்சிகளும், எவரும் சினிமாவை விமர்சனம் செய்யக்கிடைத்த வாய்ப்பும், டிஜிட்டல் புரட்சியும், இணைய வீச்சும் மிகப்பெரிய பங்குகளை வகிக்கின்றன.
இன்னும் சினிமா பெருவாரியாக மாறும். சினிமாவிற்கான முதலீடு மீது இருக்கும் அதிகாரமும், குறிப்பிட்ட பணபலம் மட்டுமே இருப்பவர்களுக்கான வாய்ப்பும் மாறும் போது, தற்பொழுதைய சூழலும் மாறும்.
உலக சினிமாவுடனும், பிற மாநில மொழி சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் தமிழ் சினிமாவைப் புரிந்து கொண்டாலும், சீர்தூக்கிப் பார்த்தாலும் கூட, தனித்துவப் போக்கில், தமிழ் சினிமா தனக்கென புதிய உருவாக்கங்களை, உள்ளடக்கங்களை, தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது.
மாற்று சினிமா, கலை சினிமா, வணிக சினிமாவுக்கு எதிரான சினிமா என்பதையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா தன் புறங்கையால் உதறி, முற்றிலும் புதிய இடத்திற்கு நகர்த்திச் செல்ல முயற்சிசெய்த வண்ணம் உள்ளது.
நித்தமும் தன் அதிகார வரையறைகளை மாற்றும் தமிழ்சினிமாவுடன் ஓட்டம் பிடிக்க முடியாதவர்கள், அதன் மீது ஒவ்வாமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்கள். ரகசியமாக, நேசித்திருக்கிறார்கள். சினிமா மீது பேதலிப்புடன், காதலுடன் திரிந்திருக்கிறார்கள். தம் வாழ்வைப் பணயம் வைத்திருக்கிறார்கள்.
சினிமா என்னும் கலை ஊடகத்தின் மீதான மக்கள் விமர்சனம் கூர்மையாக, கூர்மையாக, அது இன்னும் அதிகமாகத் தன்னைச் செம்மையாக்கிக் கொள்ளும். சமூகத்திற்கானதாக ஆக்கிக்கொள்ளும். அதிகாரத்தின் கைகளிலிருந்து பிதுங்கி வெளியேறி எப்பொழுதும் தன்னை நவீனமாக்கிக்கொள்ளும், விடுதலையாக வைத்துக்கொள்ளும் சினிமாவின் தாக்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. சினிமா தான் இன்றைய நம் கை ஆயுதம்!
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-70189750964551714552015-04-23T22:10:00.002+05:302015-04-23T22:10:45.231+05:30கவிதை என்றால், எனக்கு பிரமிளை நினைவூட்ட ஒரு சாக்கு!
கவிதை என்றால் என்ன என்பது குறித்த தெளிவான விவாதக்களத்திற்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை.
தமிழ்நவீனக்கவிதை எழுத வரலாறு, தத்துவம், மொழி எல்லாம் அவசியம் என்று பதிவிட அறிந்தவர்கள், நவீனத்துவம் நிறைந்த ஒரு கவிதையை எழுத, சமகால மொழியின் அரசியல், சமூக அரசியல் அறிந்திருக்கவேண்டும் என்பது முக்கியமாகத் தோன்றவில்லை.
கவிதைகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே எழுதப்படவேண்டும், எழுதியவராலே எழுதப்பட்டதாக இருக்கவேண்டும், அங்கீகாரம் பெற்றவராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற மனநிலை, வழக்கமான 'சிற்றிதழ் மனநிலை'.
சிற்றிதழ் மனநிலை, இன்று மேட்டிமை மனநிலையாக, மேலாதிக்க மனநிலையாக, ஏன் ஆதிக்கசாதி மனநிலையாக நன்கு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கென்று ஓர் அதிகாரம் தேவைப்படுகிறது என்பதையும் நீங்களே பார்க்கலாம்.
ஆதிக்க சாதிவெளிப்படைப்புகளுக்கு பொதுவெளியின் அங்கீகாரமும் அதிகாரமும் தாராளமாக வழங்கப்பட்டிருப்பதும் நாம் அறியாதது அல்ல.
தனக்கான அங்கீகாரத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கும் தனிமனித மனநிலையிலிருந்து தீவிர இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளப்படும் 'சிற்றிதழ் இலக்கியவெளி' இன்னும் விடுபடவே இல்லை.
கவிதை இயக்கம், ஒரு தீப்பந்தம் போல. தொடர் ஓட்டத்தில் அது கைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவே.
சமகால கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில், நிறைய அசெளகரியங்களும், கருத்தியல் பிழைகளும், முரண்பாடுகளும் நிகழ்ந்துவிடுவதாலும்,
பிரமிளின் கவிதை வீச்சும் அரசியல் தெளிவும் பொதுச்சமூகத்தைச் சென்று சேருவதன் அவசியம் இன்னும் அதிகமானது என்பதை இந்நாளில் உணர்வதாலும்,
என் கவிதை வாழ்வுக்கான முழு எழுச்சியையும் பிரமிளின் கவிதை ஆக்கங்கள் தரும் தீரா கொந்தளிப்புகளிலிருந்தே நான் பெற்றுக்கொள்வதாலும்,
கவிதையென்றால், பிரமிளை நினைவூட்டிப்பேச அவருடைய பிறந்த நாள் நல்லதொரு சாக்கே என்பதாலும் இன்று, இங்கே பிரமிள்!
குட்டி ரேவதி
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7700042097062198472.post-53640048670669373802015-04-23T22:07:00.003+05:302015-04-23T22:07:30.725+05:30தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி
என்ற பேச்சே கிடையாது
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.
எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
குட்டி ரேவதிhttp://www.blogger.com/profile/16400925069431477333noreply@blogger.com0