நம் குரல்

பாழ்வெளி

குறிகளின் அடையாளம் போதாத
மானுடக் காலமூர்ந்து சேர்ந்திருக்கிறோம்
உடலின் பாழ்வெளியில் எப்பொழுதேனும்
தொடவியலா தூரத்தில் ஓர் ஒற்றைப் பறவை
விடுதலையின் குறியாய் நீந்திக் கொண்டிருக்கிறது
நானும் நீயும் நமது குறிகளை மாற்றி
அடையாளம் அழித்துக் கொண்டதும்கூட
உடைகளை மாற்றிக்கொண்டது போலே
யோனியை வாடகைக்கோ எவரும் வசிக்கவோ
மாடிவீட்டுப் பெண்களால் வழங்கவியலாது
எதிர்வீட்டுக்குத் தன்முகக் கண்ணாடியால்
சூரியனை வரவழைத்தற் போலதை ஆட்டலாம்
பிணங்களோடு வாழ நேர்ந்த இரவுக்குப் பின்
விஷவித்துகள் வெடிகுண்டுகளாய் நிறைக்கப்பட்டு
யோனிகள் பறிமுதல் செய்யப்படும் பெண்களிடமோ
விடுதலை எப்பொழுதும் யானையின் துறட்டியாக.குட்டி ரேவதி

2 கருத்துகள்:

Sangkavi சொன்னது…

அழகான ஆழமான கருத்துள்ள கவிதை....

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

சந்தனமுல்லை சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!