1. முதல் விடயம், இந்துத்துவவாதிகளின் வரையறைகள்படிப் பார்த்தோமானால், பெருமாள் முருகனை விட மோசமாக, சமூகத்திற்கு நவீனத்தை ஊட்டியவர்கள் பட்டியலில் ஜெமோவும் சாருவும் எஸ்ராவும் அடங்குவார்கள். அதற்கு அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிலும் நிறைய பெயர்கள் பட்டியலில் அடங்கும். இவர்களை எல்லாம் ஊரைவிட்டுப் போகச்சொல்லாதது ஏன்?
அவர்களுக்கு என்றால் இரத்தம், நமக்கு என்றால் தக்காளிச்சட்னியா?
2. 'கருத்து சுதந்திரம்' என்றவார்த்தை, ஒரு தவறான பயன்பாடு. ஏனெனில், இந்தப்பிரச்சனை, விடுதலையான வெளிப்பாடு குறித்தது அல்லவே அல்ல. எதைச் சொல்லலாம், எதைச்சொல்லக்கூடாது என்பதில் இந்துத்துவவாதிகள் கொண்டிருக்கும் கட்டுப்பட்டித்தனம், அதற்கு அடங்கிப்போகும் இன்ன பிற படைப்பாளிகள். இன்னும் ஏன், நாம் 'கருத்து சுதந்திரம்' என்ற அபத்தமான வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்?
3. இப்பொழுது, பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, அணிதிரளும் படைப்பாளிகள் மீதே கூட எனக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் எழுகிறது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல், இன்னொரு சமூகப்பிரச்சனையில் இவர்கள் தங்கள் அணிகளை மாற்றி நின்று இந்த எதிரிகளோடேயே கைகோர்த்து நின்று புகைப்படம் எடுத்து, படைப்புகளைப் பொய்யாகப் பாராட்டி, மாலையிட்டு, ஒருவருக்கொருவர் நட்பை உறுதிசெய்துகொள்வார்கள்.
இந்தக்கருத்தியல் சமரசவாதிகளை அடையாளம் கண்டு, இக்கணத்தில் நினைவில் கொண்டு இயங்குவது தான் இத்தகையத் தொடர்ப்பிரச்சனைக்குத் தீர்வாகும் இல்லையா?
4. இந்துத்துவ அடிப்படைவாதிகளின், அபத்தமான முறையீடுகள் தீவிரப்படும் இந்நாளில், நாமும் நம் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தவேண்டாமா?
5. இதில், 'சகிப்புத்தன்மை வேண்டும்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துதல், பிடித்தகருத்துகள், பிடிக்காத கருத்துகள் என்ற விவாத்தத்தை முன்வைத்தல் போன்றவை விவாதத்தைப் பொருந்தாத திசையில் திருப்புதல் ஆகும். இதுவும், அடிப்படையில், இந்துமதவாதவாதிகளுக்கு ஆதரவாக இருப்பது இல்லையா?
இப்படி விவாதங்களைத் திசைதிருப்புதல் மீண்டும் மீண்டும் அடிமைத்தனங்களைப் போற்றுதல் இல்லையா?
இவற்றை மொத்தமாகப் புரிந்து கொண்டு, துரை. குணா, ம.மு.கண்ணன், பெருமாள் முருகன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பதும், நமது செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதுமே இந்தவிடயத்தைப்பொருத்து நேர்மையான அணுகுமுறையாகும்.
குட்டி ரேவதி
1 கருத்து:
மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..
தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.
இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?
உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)
இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.
ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.
ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”
நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.
ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.
இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.
இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?
உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?
http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.html
கருத்துரையிடுக