நம் குரல்

இயக்குநர் மணிவண்ணனுக்கு அஞ்சலிகள்!








இயக்குநர் மணிவண்ணனின் மறைவு பெருத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது எல்லோருக்கும். 

கடந்த சில வருடங்களில் பல சந்தர்ப்பங்களில் அவரைப் பொதுக்கூட்டங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் வாய்த்தன. 
சமூகப் போராட்டங்கள் எழுச்சியுற்றபோதெல்லாம் தன் கொள்கையிலும் தான் கொண்ட நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்து, அதையே வெளிப்படுத்தினார். 
மிகவும் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டையும் நகைச்சுவை தொனிக்கப் பேசுவதில் வல்லவர்.
மூவர் தூக்குதண்டைனைக்கு எதிராகப் போராட்டம் கனன்று கொண்டிருந்த காலத்தில், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் எந்த விதமான உதவி வேண்டுமென்றாலும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, திரைப்படம். திரைப்படம் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. சில திரை ஆளுமைகள் திரைவெளியையும் கடந்து தம் ஆளுமை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள். நான் அறிந்த அளவில் மணிவண்ணனும் அத்தகையவரே.

இயக்குநர் மணிவண்ணனுக்கு இந்த உலகத்தைப் போல மோசமானதாக இருந்துவிடாது, அவரது மரணம்! அமைதிபெறட்டும்! ஆழ்ந்த அஞ்சலிகள்!





குட்டி ரேவதி



1 கருத்து:

maruthapaandiyan சொன்னது…

திரைப்படத் துறைக்கு மணிவண்ணன் அவர்கள் வந்த புதிதில் அவரைச் சந்தித்த அனுபவம் உண்டு... சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள மனிதர் அவர்... அவர் வார்த்தெடுத்த பலர் ... அவர் முன்னெடுத்த பல சமூகப் போராட்டங்களை ... இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்... காலம் அவர்களை அடையாளம் காட்டும்... என் கண்ணீர்ப் பூக்களும் அஞ்சலி செலுத்துகின்றன....

தமிழன்புடன் - மருதபாண்டியன் -