நம் குரல்

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை - இது, பட விமர்சனம் அன்று!
இப்படம் குறித்து விவாதிக்கவும் விரிவாக உரையாடவும் நிறைய அரசியல் விடயங்கள் உள்ளன. அதற்கு வேறு சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஆனால், படம் தொடக்கம் முதல் முடிவு வரை எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது, பெண் இயக்கவாதியையும் உடன் செயல்படும் போராளிகளையும் காட்டியிருக்கும் விதம் தான்.

தமிழகம், பல வகையான சமூக அரசியல் இயக்கங்களையும், அதில் தீவிரமாக ஈடுபட்டு பல மாற்றங்களை சாத்தியப்படுத்திய பெண் செயல்வீரர்களையும் களம் கண்டது. அதற்கான, சமீபத்திய அனுபவமும், சாட்சிகளும் கூட நிறைய உண்டு.
இயக்கங்களுக்குத் தம் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த நிறைய பெண்களையும் அவர்களின் தீவிரத்தையும் நான் அறிவேன்.

இயக்குநர் ஜனநாதனே கூட, இவ்வியக்கங்களையும் போராளிகளையும் நன்கு அறிந்தவர்.
இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும், போராளிகளிடம் காணப்பட்ட உடல்மொழியும், உரையாடலும் அந்நியத்தன்மையையும் சங்கடத்தையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. கதையின், படத்தின் நோக்கத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
தமிழக இயக்கங்களின் சமூக உழைப்பை, மக்களிடம், ஊடகங்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.

தமிழகத்தின் பெண் போராளிகள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டார்களா, அவர்களின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.
சமூகப்பொறுப்புணர்வு என்பது வெறும் நடிப்பினால் மட்டுமே வெளிப்படுத்திவிடக்கூடிய ஒரு விடயமில்லை போல!

குட்டி ரேவதி

2 கருத்துகள்:

E.சாமி சொன்னது…

குறிப்பிடும் விசயம் உறுத்தலாக இருக்கலாம் ஆனால் இதில் குறிப்பிடும் பெண் கதாபாத்திரம் ஒரு கைரெக் போராளி. நீங்கள் எதிர்பாக்கும் உடல்மொழி குறிப்பிடும் கதாபாத்திரத்துக்கு பொருந்துமா என்பது சந்தேகமே. மேலும் இப்படத்தின் கரு தூக்குத் தண்டனை குறித்தும் அதைச் சுற்றிய உரையாடலும். பெண்போராளிப் பாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது. கதைக் களம் இரண்டு வகையானது ஒன்று சிறைக்கு உள்ளே மற்றது வெளியே. சிறைக்கு வெளியே இந்தக் கதைக்கு பெண்ணே தலமை தாங்குகின்றாள். அதேபோல் பெண்ணால் முடியும் என்று அவளிடம் பணிகள் ஒப்படைக்கப்படுவதும் பெண்ணின் போரட்ட சக்திமீது கொண்டிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் காட்டகின்றது. இது தமிழ்சினிமாவில் மிக அரிது.

Radha manohar சொன்னது…

இந்த படம் என்னை கொஞ்சம் ஏமாற்றி விட்டது. பல படிகள் தாண்ட எண்ணி பாய்ந்து...இன்னும் பல படிகள் தாண்டி இருக்க வேண்டுமே என்று ஆதங்க படவைத்து விட்டது. இது போன்ற படங்கள் எடுக்க முதல் கொஞ்ச நாட்கள் வேறு தமிழ் படங்களை பார்க்காமல் இருந்தால் நல்லது.ஏனெனில் சராசரி தமிழ் படங்களின் உடல் மொழி பாதிப்பு இந்த பட பாத்திரங்களை கொஞ்சம் பாதித்து...முக்கியமாக சில பாத்திரங்களின் நடிப்பு கதையின் அழுத்தத்தை வெளிப்படுத்த தவறி விட்டதோ என்று எண்ணுகிறேன்.....