நம் குரல்

பறை என்பது விழிப்பும் எழுச்சியும்!














'பறை' என்பது கடந்த நூற்றாண்டுகளின் ஒட்டுமொத்த இருளையும் தட்டி எழுப்பிய ஒரு பெருஞ்சத்தம்.



பாடிப் பாடித் தெருவெலாம் அம்பேத்கரை எடுத்துச் செல்ல உதவிய பாட்டுக்கருவி.



ஓர் அடையாளம், ஆயுதம், இணக்கம், அடங்கமறுத்தல்.



ஊழலையும் ஆதிக்கத்தையும் வெளிச்சப்படுத்துவோர் கூட தத்தம் சாதிக்கடியில் ஒளிந்து கொள்ளும் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தும் வெளிச்சம்.



பறை என்பது விழிப்பும் எழுச்சியும்.


இந்துமதத்தீண்டாமையைக் கண்டிக்கும் ஒரே அடிக்கோல்.

பறை என்பது பல நூறு ஆண்டுகளின் சப்தமின்மையை, குரல்நெரிப்பை உணர்த்தக் கிடைத்த ஒரே கருவி.



உடலின், உள்ளத்தின், அடக்குமுறைக் காலங்களின் ஒட்டுமொத்தக் கொந்தளிப்பின் நெடிய அதிர்வு.



பறை என்பது அம்பேத்கர். பறை என்பது தமிழ் இசையும். பறை என்பது சொல், தெளிவாய்ச் சொல், மீண்டும் சொல், அதையே சொல் என்பதுவும்.


எங்கே 'பறையை'த் தடைசெய்யுங்கள் பார்க்கலாம்!


குட்டி ரேவதி



கருத்துகள் இல்லை: