நம் குரல்

தமிழ் அறிவுசீவித்தனம்!







"'கருத்தியல்' என்பது புத்தியின் கூறு இல்லை. அது உடலின் இயங்கியலையும் வாழும் நிலத்தின் இயங்கியலையும் இணைத்துப் புரிந்து கொண்ட மனிதநிலை. 


உடலைத்தூக்கிக் கொண்டு நிலந்தோறும் நாடோடியாக, துறவியாகப் பறந்து திரியும் மனம் கூட, நிலத்திலிருந்து உந்தி எழுந்த காலையும் நிலத்தில் ஊன்றப் போகும் காலையும் கவனம் கொண்டு தான் பறக்கும்.

மனித உடல் நிலத்தைத் துறக்கமுடியாது.



தன் சுயத்தையும் மனதையுமே சிறந்தது என்று கருதும் மனநிலை கொஞ்சமேனும் மிருக மனநிலை நோக்கிச் சாய்ந்த தராசுத் தட்டு.


மனிதன் என்பவன் தனித்த கூறு இல்லை. சிந்தனைகளால் ஒருவரோடு ஒருவர் இணைந்து இயங்க வேண்டிய உடல்களின் மந்தையே. 

உடலைக் கலைத்துப் போடுவதும், மனதை விரித்துப் போடுவதும், அவலம் பகிரங்கமாவதும், அற்புதங்கள் ரகசியமாய் உணரப்படுவதும் என விந்தையான ஒரு மிருகக் கூட்டம் இது.

'மெய்யியல்' என்பது உடலுக்குப் பின் தான் சிந்தனை சிறந்தது என்கிறது. மனமே சிந்தனையென்றாகிறது.

உடலே முதன்மையானது. உடலுக்கே சிந்தனை தேவையாகிறது. மற்றபடி, மனம், காக்கா, கொக்கு, ஆத்மா எல்லாம் பொய்.

மனிதன் 'தன்' உடலுடன் ஒரு பொழுதும் முரண் கொள்வதே இல்லை. கொள்ளமுடிவதும் இல்லை.

சும்மா கருத்தியல் என்று கூறி உடலின் அலங்காரத்தைக் கொண்டாடாதீர்கள். உடல் நோய்கள் உடைத்து"

இப்படியாகத்தான் இன்றைய என் சிந்தனைகள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன.




குட்டி ரேவதி