கபீர்தாசரின் வாக்குகள் படித்தேன். சொற்சுவையும் பொருட்சுவையும் கலந்த இவை பிடித்திருந்தன.
ஒரே குளத்தில் திரியும் கொக்கும் அன்னமும் ஒரே நிறமாகத் தான் காணப்படும். ஆனால் பாலையும் நீரையும் தந்து தெரிந்து கொள்ளலாம். கொக்கு அப்பொழுதே வெளியாகி விடும்.
உடல் கப்பல்; மனம் காகம்; இலட்சம் யோசனை தூரம் பறந்து செல்லும்; சில போழ்தில் கடல் ஆழத்தில் அழிந்து ஒழியும். சில நேரத்தில் ஆகாயத்தில் மறையும்.
ஆண்டவனே, எனக்குக் காய்ந்த ரொட்டியைக் கொடு. நெய்யுண்டி கேட்க நான் பயப்படுகிறேன். காய்ந்த ரொட்டியையும் பிடுங்கிக் கொள்ளாதே.
ஒரு தொழில் விதைத்தல். அநேக விதைகள் விளைந்து வரும். ஒரு தொழில் வறுத்தல். முளைநூலே எழாது.
இனிய சொற்கள் மருந்து; சுடு சொற்கள் அம்புகள். சுடு சொற்கள் காதுத் துளைகள் வழியே சென்று பரவி உடல் முழுவதையும் குத்துகின்றன.
மனது குளிர்ந்திருந்தால் உலகத்தில் எதிரி ஒருவரும் இல்லை.
காட்டுத் தீயில் எரிந்த கட்டை நின்று கூவுகிறது; ‘இப்பொழுது கருமான் வீடு செல்வேன். மீண்டும் இரண்டாம் முறை எரிவேன், கரி உருவத்தில்.’
மனம் பறவையாகி விட்டது. எங்கு விருப்பமோ அங்குப் போகட்டும்.
சந்தை சரியில்லை என்றால் அங்கே வைரத்தைத் திறக்காதே, இறுக்கி முடிச்சில் கட்டு; எழுந்து வழிநட.
சக்கயி என்ற பெண் புள் இரவில் ஆணிடமிருந்து பிரிகிறது. காலையில் வந்து சேர்கிறது.
வழி பார்த்துப் பார்த்து விழிகள் குழி விழுந்து விட்டன. பெயரைக் கூவிக் கூவி நாவில் கொப்புளம் ஏற்பட்டுவிட்டது.
தலையை இறக்கிப் பூமியில் வை. அதன் மேல் காலையும் வை. இப்படி முடியுமானால் ‘வா!’
அன்பு தோட்டத்தில் முளைக்காது. சந்தையில் விற்காது. அரசனோ, குடியோ, வேண்டுபவன் தலையைக் கொடுத்துவிட்டு எடுத்துச்செல்லட்டும்.

2 கருத்துகள்:
மனது குளிர்ந்திருந்தால் உலகத்தில் எதிரி ஒருவரும் இல்லை
nice
எனக்கும் பிடித்திருந்தது, அமுதம்!
ஆனால் எதிரி என்ற வார்த்தையையே கேட்பதற்கு சொல்வதற்கு எழுதுவதற்கு என்னவோ போலிருக்கிறது.
கருத்துரையிடுக