நம் குரல்

நவபாடினியம் 2013நான் அறிந்த மட்டில் பல வருடங்களுக்குப் பின்பு இப்படியான ஒரு முழு நாள் நிகழ்வு. முழுதும் பெண் கவிஞர்களால் ஆன நிகழ்வு. 

சென்னை கிறித்தவக்கல்லூரியின் கம்பன் மன்றம் இக்கருத்தரங்கத்தையும் கவியரங்கத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. 

பெண் கவிதையில் நடந்த வழிகளும் தொலைந்த வழிகளும் குறிந்த அடர்ந்த ஒரு நாள் நிகழ்வு.

நவீன இலக்கியப் பார்வை தொனிக்கும் படியாக நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் இதன் சிறப்பு என்று சொல்லவேண்டும்.

கவிதையின் மீது ஆர்வம் கொண்டோரும், நண்பர்கள் எல்லோரும் இந்நிகழ்வைத் தவறவிடாது கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்.


குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: