நம் குரல்

சேவலண்ணன் கதறுகிறார்

சேவலண்ணனுக்கு முட்டையிட்டு அடைகாக்கும் அவசியமுமில்லை : பெட்டையைப்போல் கூடித்திரியும் களிப்பையும் அறியார். பிரக்ஞையின் கூட்டிற்குள்ளிருந்து தினப்படி சாட்டையாலடிக்கும் சேவலண்ணனின் குரல், கனவில் நாவறுந்த கதறலுடையது. முட்டையின் கவர்ச்சியையும் பெட்டையின் விடியல் நோக்கிய வாழ்வையும் பொறாமையாய்க் கழிய மட்டுமே தெரியும். காலைதோறும் வலைத்தளங்களிலெல்லாம் பேதியாய் சேவலின் கழிவு. சேவலின் மகிழ்ச்சியற்ற வார்த்தைகள் சொருகிக்கொண்ட வெளி முட்காடென மாறும். பொழுது மாறிக்கூவும் புட்டத்திமிர் ஒரு வெற்று. ஆகவே முட்டைகளே வீணெண்றும் குஞ்சுகளை புறக்கணித்தும் அலைகின்றன. பொரிகின்றன மின்னொளியில் பிளாஸ்டிக் கோழிகள் ஒரே நிறக்கொண்டையுடனும் உடலுடனும்.


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

///காலை தோறும் வலைத் தளங்களிலெல்லாம் பேதியாய் சேவலின் கழிவு.///

புரிகிறது தோழியே..!

திமிரோடு கழியும் சேவல்களின் எண்ணிக்கை குறைவுதான்..!

குட்டி ரேவதி சொன்னது…

எனில் நன்று உண்மைத்தமிழனே!