நம் குரல்

விமர்சனம் ஒரு சொல்


விமர்சனத்தின் ஆழம் மறுத்த வெளியில்


கவிதை சிகை மழிக்கிறது உருவழிகிறது


ஒரு சொல்லும் பொறுக்காதது கவிதை இல்லை

இது கண்டவன் தனதையே கல்லால் நொறுக்குவான்மின்னூட்டம் பெற்ற கண்ணாடிக் குப்பிகளில் கவிதை
குழல்வழி ஆக்சிஜனில் நீந்தி மகிழ விரும்புவதில்லை
திரைப்பதிப்பில் உயிருறும் தம்மைக் கொஞ்சும்
குழந்தைகளிடமும் முத்தம் பெறா
கண்ணீர்க் கசியும் வாசகனின் உஷ்ண மூச்சு
மேல் மோதியதும் வாரி அணைத்துக் கொள்ளும் கவிதை
நிகழ்வுகளுடன் மோதி உள்சிராய்ப்புகள் பூத்து
அது அழுவதுமில்லை பதறுவதுமில்லை
காற்றில் எழும் விமர்சனங்கள்
அதன் திக்கு எட்டும் புரவிகளாய்ச் சீற

கல்லடி தாங்கிய கவிதையோ ஒரு போதும்

பிணவறையை நோக்கிப் பயணிப்பதேயில்லை
சொல்லப்போனால் நிகழ்வுகளின் முகத்தில் கரியைப் பூசும்
குட்டி ரேவதி

2 கருத்துகள்:

ஆண்டாள் சொன்னது…

படித்து வியப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை இதில் விமர்சனம் எப்படி செய்ய

RVC சொன்னது…

கவிதை சாகாது!
சாகாதது எல்லாம் கவிதையும் ஆகாது :)
விமர்சனத்தின் பாதையில் எப்போதும் மலர் தூவப்பட்டிருப்பதில்லை. புறக்கணிக்கப்பட்ட பிரதிகள் இன்று காலஓட்டத்தில் 'பெஸ்ட் ஸெல்லர்களாய்' இருப்பதே நிதர்சனம்.