நம் குரல்

பாலியல் அரசியல் கவிதை - 4

4. எத்தகைய பேருடல் இது!எத்தகைய பேருடல் எனது என வியக்கிறேன்.
எத்தனை ஆண் உடல்களை நான் சுகித்திருக்கிறேன்
எத்தனை பெண் உடல்களை சீரணித்திருக்கிறேன்
மில்லியன் வருடங்களுக்குப் பின்னாலும் இதோ
என் யோனி வற்றாத முப்பெருங்கடலாய் அலைபாய்கிறது

இன்று என் பேருடல் காற்றில் படபடக்கும்
ஒரு வெள்ளைத்தாளைப் போல அலைகள் மீதூற
மடிந்து விரிகிறது
வெற்றுடலாய் இருக்கிறது

தேவதைகளின் வார்த்தைகளால் நிரம்பிய
முதுமையான தாழி 
இறக்கைகளை விரித்து தனக்கே வானம் 
செய்து கொள்ளும் பேரூந்து பெரும்பருந்து

இனி எப்பொழுதுமே சாவமுடியாது
யோனி மறைந்து அழிந்து காற்றாகி இன்னொரு
யோனியாகப் பூக்கும்
பல யோனிகளின் ஆதி வாயிலாகும்குட்டி ரேவதி

கருத்துகள் இல்லை: