எழுத்தாளரும் விமர்சகருமான சாரு நிவேதிதாவே 2012 - ம் ஆண்டின் சிறந்த மனிதர்!
உண்மையிலேயே சென்ற வருடத்தின் 'சிறந்த மனிதர்' விருது, சாரு நிவேதிதாவிற்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த நேர்மையிலிருந்து நாம் தவறி விட்டோம் என்பதைத் தான் சாரு நிவேதிதாவின், 'உரத்த சிந்தனை: "சலவை'யாக்கப்பட்ட சிந்தனைகள்!' பதிவு எனக்கு உணர்த்துகிறது.
சாரு நிவேதிதாவின் எழுத்துப் பணிகளுக்காகவும் தேசப்பற்றுக்காகவும், ஒரு பத்திரிகையாளராக அவரது உரத்த சிந்தனைக்காகவும், 'சிறந்த மனிதர்' விருது அவருக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்துல்கலாமிற்குப் பிறகு, அணு உலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறிந்த ஒரே அறிவு ஜீவி, நவீன இலக்கியப்படைப்பாளி சாரு தான். அணு உலை விவகாரத்தில் அவர் என்ன சொன்னாலும் அது சரியாகத் தான் இருக்கும்.
அரசையும், காவல் துறையையும், உதயகுமாரையும் விட மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட கொள்கைகளை நான் சாருவிடமே காண்கிறேன்.
தினம் தினம் மக்களின் குரலைத் தன் குரலாகப் பதிவு செய்யும், நம்மில் ஒருவராய் நம் அருகிலேயே இருக்கும் மாபெரும் இலக்கியவாதிக்கு விருது கொடுக்காமல் தொலைதூரத்தில் தென் எல்லையில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எந்த வகையில் நியாயம்?
இதற்காக எத்தனை வழக்குகளை சாரு அவர்கள் சந்தித்து இருக்கிறார்?
எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்?
கடந்த ஐந்நூறு நாட்களாக, அணு உலையை ஆதரித்து வீதிவீதியாகச் சென்று சாரு நிவேதிதா பிரச்சாரம் செய்ததையெல்லாம் நாம் மறந்தால் வருங்கால சந்ததி ஒருபோதும் நம்மை மன்னிக்காது!
இவ்வளவு நன்றியுணர்வு அற்றதா தமிழ் கூறும் நல்லுலகம்?
குட்டி ரேவதி

1 கருத்து:
யாரையும் காமெடி கீமெடி பண்ணல்லியியே இங்கே.... :P
கருத்துரையிடுக