நம் குரல்

சென்னையில் அணு உலை எதிர்ப்பு மாநாடு, பி.26, 2012
அன்பார்ந்த தோழர்களே,கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் தலைமுறைகளைக் காக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் போராட்டத்தின் நீதியை, இந்திய அரசு அவதூறு செய்து வருகிறது. பொய் வழக்கு, அச்சுறுத்தல் மூலம் அப்போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது.


கூடங்குளம் அணு உலையால் கிடைக்கும் மின்சாரத்தைவிட, அது உருவாக்கும் பேரழிவு தமிழகத்தையே உருக்குலைய செய்து விடும். இலட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை பாழ்படுத்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

இந்த அபாயத்தை நமக்கு எச்சரித்து, நம்மையும் தமிழ்நாட்டையும் காக்கப்போராடும் அணு உலையை சுற்றியுள்ள கிராம மக்களுடன் நாமும் தோளோடு தோள் நின்று போராட வேண்டும்.இப்படிக்கு,
அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்
1 கருத்து:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

அணுஉலைகளுக்கெதிரான போராட்டம் வெல்லட்டும். அணுஉலையால் மின்தட்டுப்பாடு நீங்கும் என்னும் அறியாமை இருள் அகலட்டும். பகிர்விற்கு நன்றி.