நம் குரல்

புறனடை - சீரிய இலக்கிய இதழ்

புறனடை

மேலும் ஒரு இதழ் வருகிறது
என்ன தேவைகள் குறித்து,
நேற்றும் இது வந்ததா,
எந்த இடைவெளிகள் நிரப்ப?
எதன் நகல், நகலின் நகலின்..
அதன் இதன் எதன் சாயல்
வெறும் பெயர் மாற்றமா ?
யாருடைய சொல்லாக அது இருக்கும்.
காலத்தின் மீது என்ன அசைவுகள் கருதி ?
எந்தக் குழு ? என்ன நிலைப்பாடு ?
சாயமிழந்த ஒரு காலத்தின் உற்பத்தி விளைவா
சந்தைச் சூழலின் ஒரு வெற்றுப் பக்கமா
அதன் உள்ளீடு எதனால் நிரம்புகிறது ?
ஒரு சிறு கல்லெறிதலா, விலகலா, ஊடறுப்பா, உப பிரதியா
பிரபஞ்ச இயக்கத்தில் மெல்லிய சலனங்கள் பரவவிடும்                                                          
ஒரு பட்டாம்பூச்சி விளைவா .
வரலாற்றின் இடைவெளிகளில்                                                                                              
எப்போதும் நிரம்பியிருக்கும் மௌனமா..ஆசிரியர் குழு: பிரவீண், ராஜ், ரவிச்சந்திரன், அருள், ஆர். அபிலாஷ், செல்வம், தேவா

தொடர்பு எண்: 9710014218 /9884772864
மின்னஞ்சல்: puranadai@gmail.com
விலை: ரூ.15/-

கருத்துகள் இல்லை: