நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது
தாவர இச்சையின் மிடுக்குடன் எழும்
திரண்ட கவர்ச்சியின் வாழை யான்
குலைதள்ளும் நாளில்
வெட்டிச் சாய்த்தது உமது அரிவாள்
தோலுரித்தது உடல் கிழித்தது
என்றாலும் காலைச் சுற்றிலும்
கணுக்கால் உயரத்தில்
மீண்டும் மீண்டும் முளைத்தெழும்
என் கம்பீரத்தோகைகள்
குட்டி ரேவதி
நன்றி: ‘புது எழுத்து’ இலக்கியச் சிற்றிதழ்
6 கருத்துகள்:
நறுக்!
நம்பிக்கை
வரிகள்.
-திரு
நல்லாருக்குங்க.
கொண்டாட்டம் தொடரட்டும். யானுமிட்ட தீயும் மிகவும் பிடித்திருந்தது.குறிப்பாய் /முற்றா முகிழ்முலைகளாகி மரங்கள் பூத்துக்கொட்டும் பிரதேசமொன்றை நிர்வாண உடலுமாக்கியவள் ‘யானுமிட்ட தீ’ ஈதென்று சூரியனைச் சுட்டும்போது நம்பித்தான் ஆகவேண்டும் தோழர்களே!/ இந்த பரவச நிலை பிடித்திருந்தது.
'வெட்டிச் சாய்த்தது உமது அரிவாள்
தோலுரித்தது உடல் கிழித்தது
என்றாலும்'
ஈன்று புறந்தருதல் மறுபிறப்பு
வாழையடி வாழையாய் ...
கு. முத்துக்குமார்
http://kumuthukumar.blogspot.com/
அருமைங்க
தோழி கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
கருத்துரையிடுக