நம் குரல்

மனிதர்கள் நாம் சுரணையற்றவர்கள் என்பதற்கு இதுவுமோர் உதாரணம்!


நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கும்போது, நிறைய பெண்கள் சென்ட்ரல் நிலையத்தின் தண்டவாளப்பாதையில் இறைந்து கிடந்த மனித மலத்தைக் கூடையில் அள்ளிக்கொண்டிருந்தனர்.

பொதுநிலையத்தில், ரயில் நிற்கும் போது, ரயிலின் கழிவறையை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து, ஏற்கெனவே அறிவிப்புகள் இருந்தும், யாரோ தானே சிரமப்படுகிறார்கள் என்ற மனித எண்ணம் அது பற்றிய அக்கறையின்மையுடன் நடந்துகொள்கிறது.

இதனால், அந்தத் தண்டவாளத்தில் சேரும் மனிதக்கழிவை, பணியாளர்கள் தம் கைகளாலேயே அள்ளும் அவலநிலைக்குத் தள்ளுகிறோம்.

அதிலும் அவலம், எல்லா மக்களும் வசதியாக ரயிலிலிருந்து இறங்கிச்செல்ல, அவர்கள் முன்னிலையிலேயே பணியாளர்கள் மலம் அள்ளுதல் என்பது ஒரே காலத்தின் இரண்டு முரண்பட்ட காட்சிகளைக் காட்டுகிறது.

மனிதர்களாகிய நாம் இன்னும் எவ்வளவு கேவலமான ஒரு முறையை சுரணையற்றுப் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம், மனிதமானத்திற்கான மதிப்பைப் புறந்தள்ளுகிறோம் என்பதையும் குத்திக்காட்டுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, இதர பொது ரயில் நிலையங்களிலும் இதைப் பின்பற்றுவது மனித உரிமையைக்காப்பதாகும்.

மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலநிலையை மாற்றுவதில் இது மிகச்சிறிய முயற்சியாக இருக்கும்.குட்டி ரேவதி

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Use a modern toilet to collect the shit....
Still dropping in ghe platform. Disgusting
GA

நம்பள்கி சொன்னது…

நீங்கள் எழுதியவை எல்லாம் உண்மை! ஆனால், நம் மக்கள் மற்றவர் வலியை என்றும் அறிய மாட்டர்கள்--அறிய விருப்பமும் இருக்காது.

இங்கு மேலை நாடுகளில், ஸ்டேஷன் வரும் முன்பே எல்லா கழிவரைகளையும் பூட்டி விடுவார்கள்!

இந்தியாவில் ஜாதி வழியாக மனிதர்களை பிரிக்கும் வரை இது இப்படியே இருக்கும். மனித மலத்தை அகற்ற மாதம் ஆறு இலக்க சம்பளம் என்று சொல்லுங்கள்; அப்ப அவர்கள் வேலையில் சேர்வது மட்டடுமல்லாமல்--எங்கு எப்படி சுகாதாரமா கழிவது என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமக்கு பாடம் எடுப்பார்கள்--அதுக்கு சூத்திர அல்லக்கைகள் ஜால்ரா அடிப்பார்கள்!

பின்குறிப்பு:
பிராமணர் அல்லாத எல்லோரும் சூத்திரர்கள் தான்!

சென்னை பித்தன் சொன்னது…

வருத்தும் உண்மை.