நம் குரல்

மனித மலத்தை மனிதன் அள்ளும் நிலையை மாற்றுவோம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித மலத்தை மனிதன் அள்ளும் நிலையை மாற்றுவோம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனிதர்கள் நாம் சுரணையற்றவர்கள் என்பதற்கு இதுவுமோர் உதாரணம்!


நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கும்போது, நிறைய பெண்கள் சென்ட்ரல் நிலையத்தின் தண்டவாளப்பாதையில் இறைந்து கிடந்த மனித மலத்தைக் கூடையில் அள்ளிக்கொண்டிருந்தனர்.

பொதுநிலையத்தில், ரயில் நிற்கும் போது, ரயிலின் கழிவறையை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து, ஏற்கெனவே அறிவிப்புகள் இருந்தும், யாரோ தானே சிரமப்படுகிறார்கள் என்ற மனித எண்ணம் அது பற்றிய அக்கறையின்மையுடன் நடந்துகொள்கிறது.

இதனால், அந்தத் தண்டவாளத்தில் சேரும் மனிதக்கழிவை, பணியாளர்கள் தம் கைகளாலேயே அள்ளும் அவலநிலைக்குத் தள்ளுகிறோம்.

அதிலும் அவலம், எல்லா மக்களும் வசதியாக ரயிலிலிருந்து இறங்கிச்செல்ல, அவர்கள் முன்னிலையிலேயே பணியாளர்கள் மலம் அள்ளுதல் என்பது ஒரே காலத்தின் இரண்டு முரண்பட்ட காட்சிகளைக் காட்டுகிறது.

மனிதர்களாகிய நாம் இன்னும் எவ்வளவு கேவலமான ஒரு முறையை சுரணையற்றுப் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம், மனிதமானத்திற்கான மதிப்பைப் புறந்தள்ளுகிறோம் என்பதையும் குத்திக்காட்டுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, இதர பொது ரயில் நிலையங்களிலும் இதைப் பின்பற்றுவது மனித உரிமையைக்காப்பதாகும்.

மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலநிலையை மாற்றுவதில் இது மிகச்சிறிய முயற்சியாக இருக்கும்.



குட்டி ரேவதி