நம் குரல்

தமிழ் ஸ்டுடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் ஸ்டுடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண் என்ற ஒற்றை அடையாளம், ஆதிக்கச் சிந்தனைப் பெண்களுக்கானது!








http://koodu.thamizhstudio.com/nerkaanal_4.php













(‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்.)


நேர்காணல் செய்தவர்கள்:
ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ்


நன்றி: 'புறனடை' இலக்கியச் சீரிதழ், 'தமிழ் ஸ்டுடியோ' இணைய இதழ்

'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்' நூல் வெளியீட்டு விழா






எந்த அதிகாரத்தோடும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டுடியோ! இந்த இயக்கத்துடன் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!
கடந்த பத்தாண்டு நவீன தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போட்ட 
பெண் கவிஞர்களின் விடுதலை மொழியை அலசும் தொகுப்பு! 
உடலரசியலை ஆணித்தரமாய்ப் படைத்த எழுத்தையும் மொழியையும் முன்னிறுத்தும்
நவீன இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் வடிவமான 
பெண் கவிஞர்களை ஒன்று திரட்டிய தொகுப்பு!





தமிழ் ஸ்டுடியோவில் நான் தொடராக எழுதிய, 'ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப்பிரதிகள்' நூலாக வெளிவருகிறது,  இன்று! இது, கடந்த பத்தாண்டுகளில்,  என்றென்றுமாய் கட்டமைக்கப்பட்டு வந்த ஆண்மைய இலக்கியப் புரிதலை தம் கவிதை மொழி வழியாகத் தகர்த்தப் பெண் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் நிறைந்தது. தமிழ் ஸ்டுடியோ, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது. எழுத்தாளர் அஜயன் பாலாவால் தொடங்கப்பட்டு இயக்கப்படும், 'நாதன் பதிப்பகம்' நூலை பதிப்பித்திருக்கிறது.  எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், பாலை நிலவன், யாழன் ஆதி, தமயந்தி, அஜயன் பாலா, நர்மதா, தி.பரமேசுவரி மற்றும்பிரவீண்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.  இன்று மாலை 6  மணி அளவில் எழும்பூர் கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கத்தில் நடைபெறுகிறது.  இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று அதை முழுமையடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!



ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்- 14
ஃபஹீமா ஜஹான் - நம் அன்னையரின் ஆதித்துயர்








http://koodu.thamizhstudio.com/thodargal_14_16.php



குட்டி ரேவதி
நன்றி: தமிழ் ஸ்டூடியோ

"லெனின் விருது" விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியான குறும்பட / ஆவணப்பட திரையிடல், கலந்துரையாடல் நிகழ்ச்சி.












தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வழங்கி வருகிறது. குறும்பட / ஆவணப்படத்துரையில் மிக சிறப்பாக பங்காற்றி வரும் ஒருவருக்கு வழங்கப்படும் இவ்விருது பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும், கேடயமும் உள்ளடங்கியது. இந்த ஆண்டு இவ்விருது வழங்கும் விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்று:
இதுவரை தமிழில் வெளிவந்த ஐந்து சிறந்த குறும்படங்கள் திரையிடல்:
நாள்: ஆகஸ்ட் 05, வெள்ளிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


திரையிடப்படும் குறும்படங்கள்:
நாக் அவுட் - பீ.லெனின்
நானும் - மாமல்லன்
ஆயிஷா - சிவக்குமார்
தக்கையின் மீது நான்கு கண்கள் - வசந்த்
வன்னி எலி - சுபாஷ்
நிகழ்ச்சி இரண்டு:


குறும்பட / ஆவணப்படங்களுக்கான தேவை / குறும்பட / ஆவணப்பட வரலாறு குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தல்.
ஒரு சிறப்பு அழைப்பாலருடன் ஐந்து குறும்பட இயக்குனர்கள் கலந்துரையாடும் நிகழ்வு.


சிறப்பு அழைப்பாளர்: சீனு ராமசாமி (திரைப்பட இயக்குனர்)
அறிவழகன் (குறும்பட இயக்குனர்)
சுப்புராஜ் (குறும்பட இயக்குனர்)
பொன்ராஜ் (குறும்பட இயக்குனர்)
ஸ்ரீகணேஷ் (குறும்பட இயக்குனர்)
ஜெயராவ் (நிறுவனர், தியேட்டர் லேப்)
நாள்: ஆகஸ்ட் 06, சனிக்கிழமை
இடம்: தியேட்டர் லேப், (டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


நிகழ்ச்சி மூன்று:
தமிழ் குறும்பட / ஆவணப்பட வரலாறு, அழகியல், அரசியல், அதன் வளர்ச்சி குறித்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி.
பங்கேற்பு:
கைலாசம் பாலச்சந்தர்
அஜயன் பாலா
பிரசன்னா ராமசாமி
ம. சிவக்குமார்
ஆர். ஆர். சீனிவாசன்
வெளி ரங்கராஜன்
குட்டி ரேவதி
கோவி. லெனின்
அமுதன்
ரமணி
சோமித்ரன்
நிழல் திருநாவுக்கரசு
நுங்கு கங்கைக் குமார்
இன்னும் பலர்..
நாள்: ஆகஸ்ட் 07, ஞாயிற்றுக் கிழமை
இடம்: ஜீவன் ஜோதி அரங்கம், எக்மோர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)
நேரம்: மாலை ஐந்து மணியளவில்


அனைவரும் வருக..