நம் குரல்

இலக்கியப் பகடி 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியப் பகடி 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காலிப் பெருங்காய டப்பா




காலிப் பெருங்காய டப்பாவை ஏன் முகர்ந்து முகர்ந்து பார்க்கிறீர்கள்? 

வேறு என்ன இருக்கப் போகிறது? 


கடந்த கால வாசனையும், சில முன் முடிவுகளும், நான் இதுவாக்கும் அதுவாக்கும் என்ற அதே பெருங்காய மமதைகளும் தாம்!


இன்று தன்னிடம் எதுவுமே இல்லையென்றாலும், முன்பு தான் கொண்டிருந்த பெருங்காய வாசனையை மட்டும் விடப் போவதே இல்லை!


முன்பொரு காலத்தில் அதில் ஏதோ இருந்ததே என்ற ஞாபகத்தில் இன்னும் ஏன் அதை முகர்ந்து முகர்ந்து பார்க்கிறீர்கள்? 


இப்பொழுது அது ஒரு காலிப் பெருங்காய டப்பா தானே?




குட்டி ரேவதி