நம் குரல்

வன்மம்

ஒரு கற்பனையான உரையாடல்.



"என்னோட வேலையில நீங்க கொஞ்சம் உதவனும்! உங்கள விட்டா எனக்கு வேற ஆள இங்கத் தெரியாது."

"ம். யோசிக்க கொஞ்சம் சமயம் கொடுக்க!"

"யோசிக்கிறதுக்குக் கூட எனக்கு நேரம் இல்லை. பாருங்க இந்த ஐம்பது வயசிலயும் எவ்வளவு இளமையா, உற்சாகத்தோட அடுத்தடுத்த வேலைக்குப் போயிக்கிட்டே இருக்கேன்.
இந்த இளவயசில வேலை செய்யுறதுக்கு யோசிக்கிறீங்களே!"

"ஆமா..இனி யோசிக்காம எதையும் செய்யமுடியாது. காலம் விரயமாகிறத பாத்துக்கிட்டு இருக்குறவிட, அதக் கட்டுப்படத்துற உரிமைய இழக்குறத விட, திட சோம்பேறியா இருக்கலாம்னு தோணுது! ஏன்னா காலம் விரயமாகுற வேலையையே செஞ்சிக்கிட்டு இருக்குறதா அலுப்பு தட்டுது"

"அப்படி என்ன வேலையால காலம் விரயம் ஆகுதுன்னு சொல்லுறீங்க!"

"விரயம் தான். விதைக்குள்ள வேற செடிக்கான வீர்யம் தான் இருக்கு. நீங்க சொல்லுற மரமோ, கள்ளிச்செடியோ அதுக்கான வீர்யமோ இல்ல. அதப்பத்தின கவலை உங்களுக்கு தேவை இல்ல"

"நான் எப்படி கவலப்படாம இருக்கமுடியும். ஒங்களுக்கு நீங்க ஓவர் ஸ்மார்ட்டுன்னு நெனைப்பு."

"அப்படி இருந்திருந்தா ஏன் மத்த ஆட்களுக்குக் கீழ வேலை செய்யுறோம்"

"ஏதோ இல்லாததுனால தான வரீங்க. அப்புறம் என்ன வீராப்பு?"

"அப்ப, உங்கக்கிட்ட என்ன இல்லங்குற குறைய தீர்க்க என்னைய தேடுறீங்க. விட்டுடுங்க"

"என்ன குரல் உயருது?"

"உங்க அதிகாரம் உயருறதோட எதிரொலியா இருக்கும்!"

"வார்த்தைய அளந்து பேசுங்க!"

"வார்த்தைய அளந்து பேசுறதுக்குத்தான் சமயம் கேட்டேன்"

"இப்ப என்ன தான் சொல்லவரீங்க? இந்த ப்ராஜெக்ட்ல வேலை செய்யமுடியுமா முடியாதா?"

"ஒப்பந்தத்துக்கு முன்னாடியே இவ்வளவு காயப்படுத்துற அதிகாரம் ஒரு பொழுதும் என்னுடைய கிரியேட்டிவிட்டியால மகிழ்ச்சியடையாது. 
மடியிலருந்து பால இறக்குற அவசரமும் பேராசையும் தான் இருக்கும்"

"என்ன என்னைய சொரண்டுறவன்னு நெனைக்கிறீங்களா?"

"எனக்கு அவகாசம் வேணும்னு கேட்டது சலுகை இல்ல. என்னோட உரிமை. அதுவே உங்க அதிகாரத்தைக் கிண்டிவிடுறத பாக்கும் போது, ஒங்க ப்ராஜெக்ட்ல நீங்க வைக்கிற ஹ்யூமன் வேல்யூஸ் பத்தின கேள்வி இப்பவே தலைதூக்குது"

"விருப்பம் இல்லன்னா ஒரே வார்த்தையில சொல்லிட்டு போவலாம். நொண்டியடிச்சிக்கிட்டு இருக்கீங்க!"

"விருப்பம் இல்ல!"

"உங்கக் கிட்ட எப்படி வேலை வாங்கனும்னு எனக்குத் தெரியும்! போங்க."

"அது வேலை இல்ல. என்னோட சரக்கு. அத நீங்க எவ்வளவு எங்கிட்ட கறந்தாலும் அது உங்களுக்குப் பயன்படாது. மண்ணில கொட்டுற பால்மாரி"

"எனக்குப்பயனில்லாதது மண்ணோட மண்ணா ஆனா எனக்கு என்ன?"

"குட் லக்!"






குட்டி ரேவதி








1 கருத்து:

EveningCoffeeWithVinesh சொன்னது…

intha vanmam urayaadal avlo alagu..
ungal nenje elu paadal varigalum avlo uthvegam alipathaaga ullathu..

en blog..eveningcoffeewithvinesh.blogspot.in vanthu paarka anbodu alaippu vidukiren..