நம் குரல்

மடக்குக் கத்திஇலக்கியவாதிகள் எப்பொழுதும் மற்றவர்கள் குறித்த அவதூறுகளையும் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும்  மடக்குக் கத்திகளைப் போல மடிக்குள் செருகிக் கொண்டே அலைகின்றனர்.


சட்டென்று கத்தியை உருவி முகத்திற்கு நேராக நீட்டி பூச்சாண்டி காட்டி மிரட்டுவதற்கு வசதியாக இருக்கும்.


இவர்களின் 'writer' என்ற முத்திரை, சமூகத்தில் எந்த இடத்திலும் இன்னாருக்கு இன்னது வேண்டும் என்று கேட்டு வாங்கும் முத்திரை ஓலையாகக் கூட பயன்படாது.

அல்லது தனக்கே எதையும் பெற்றுத்தரும் எந்த செல்வாக்கும் கூட இல்லாதது.


இவர்கள் குடும்பத்திலே கூட ஒரு பல்துலக்கும் குச்சிக்கு இருக்கும் பயனும் இல்லாதது. 


இத்தகைய 'சூன்யமான' சமூகச்சூழல்!


ஆனால், ஒண்ணு யோசிச்சீங்களா?  ஒருத்தர் மேல ஓர் ஈர்க்குக்குச்சி குத்தினா கூட பதறி ஒரு காக்காக் கூட்டமே பறந்து வந்து சேரும். 


அப்பத்தான் தெரியும், 


அது வரை பேசின தலித்தியம், பெண்ணியம், தமிழியம், சுதந்திர இயம் எல்லாமே ஒரு இண்டெலக்சுவல் விளம்பர பேனருக்காக என்று! 


கூடுற கூட்டம் எல்லாம் கத்தி சத்தம் போடத்தெரிஞ்ச 'லெளட் ஸ்பீக்கர்' ஆதிக்க இரத்தக் கூட்டமா இருக்கும்! 


மடக்குக் கத்திய மடிக்குள் செருகிக்கிட்டே சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாம் பேசுறவங்கங்கிறதும்!


வழியில பயம், மடியில கத்தின்னு வச்சுக்கலாமா?குட்டி ரேவதிகருத்துகள் இல்லை: