நம் குரல்

கொம்புகள்
தலைக்கு மேலே கொம்புகள் முளைக்கும் வரை தான்  ஒருவருடன் ஒருவர் முட்டிக்கொள்ள வேண்டும். அதற்குப் பின் தன்னுடைய கொம்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் நன்றாகச் சீவி விட்டுக் கொண்டால் போதுமானது. 

எல்லோரின் நகைச்சுவை உணர்வும் தீர்ந்தே  போய்விட்டது என்பதற்கு சாட்சியாக எல்லோரின் நிலைத்தகவலும் சுழன்று சுழன்று என்னிடமே வருகிறது. 

குப்பையையெல்லாம் பகடி என்கிறார்கள். பிழைப்பை நேர்மை என்கிறீர்கள். சீரியஸ் மட்டும் உயிர் போகக் கதறிக் கொண்டிருக்கிறது.

அப்பாடா, உடையில் ஒட்டிய ஆடையொட்டிகளை உதறிவிடுவதே வேலையாக இருந்த காலம் போயே போய்விட்டது.  அஜீரணத்தால், எல்லோரின் ஜீரண உறுப்புகளும் பழுதாகிக் கொண்டு வருவதை மட்டும் தான் இன்று உணரமுடிகிறது.

எல்லோரும் உறங்கும் மதிய வேளையில் ஸ்பீக்கர் தலைக்கு மேலே அலறிக் கொண்டிருக்கிறது. இரவுகளின் தலைக்கு மேலேயும் கதறிக்கொண்டிருக்கிறது.


குட்டி ரேவதி1 கருத்து:

Unknown சொன்னது…

சூப்பர்