நம் குரல்

அடையாளத்தின் புதிய வெளியீடுகளாக என் கவிதைகள்




எனது ஐந்து கவிதை நூல்கள் யானுமிட்ட தீ, உடலின் கதவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முலைகள், பூனையைப் போல அலையும் வெளிச்சம் ஆகியவை அடையாளம் வெளியீடாக வந்துள்ளன. 


நூல்கள் கிடைக்குமிடம்: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310,
திருச்சி மாவட்டம், இந்தியா தொலைபேசி 04332 -273444

1. யானுமிட்ட தீ (2010)


சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இக்கவிதைகள் இயல்பூக்கத்துடன் திறக்கின்றனஉடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றனதொல் அறத்தை மீட்டெடுக்கின்றனவரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும்அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியில் இக்கவிதைகள் பீறிடுகின்றனஇதுவே இக்கவிதைகளை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கிறது.


2. தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல்பெண் உடல்உடலரசியல் போன்ற தளங்களில் ஒலிக்கும் ஒரு குரலை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பதிவு செய்திருக்கின்றனஏக்கம்நிராசை,காமம்மரணம் போன்ற அனுபூதிகள் இக்கவிதை வரிகளில் சாகாவரம் பெற்று இயங்குகின்றனஇயற்கையின் மீதான அவதானிப்பு இக்கவிதைகளில் பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கிறதுபெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களை இவை துணிந்து உச்சரிக்கின்றனஅந்தச் சொற்கள் ஆணாதிக்க மனத்தின் செவிப்பறைகளில் போய் மோதி அதிர்கின்றனஇதுவே இத்தொகுப்பை பிற கவிதைத் தொகுப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது.

3. உடலின் கதவு (2006)
ஆணாதிக்கச் சமூகத்துக்கெதிரான ஒரு பெண் மனத்தின் சீற்றம் இக்கவிதைகளில் தெறிக்கிறது.காமம்புணர்ச்சி,கருவுறுதல் என்று விரியும் குறியீடுகள் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும்ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றனகவிதை வரிகள் தோறும் படிமங்களும்தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளம் போல் பிரவகித்துப் பாய்கின்றனசில தருணங்களில் வெள்ளம் வடிந்த பின் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றனகவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கு கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்ளும் அதிசயம்  இந்தத் தொகுப்பில் சாத்தியப்பட்டிருக்கிறது.

4. முலைகள் (2002)
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த்துளிகள் என்று அறிவித்து பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தியைத் தகர்க்கிறதுஇத்தொகுப்பில் இயங்கும் கவிதை மனம் வாழ்க்கையின் முட்களில் சிராய்த்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறதுஅதே சமயத்தில் வாழ்வின் அதீதமான தருணங்களை போகிற போக்கில் தரிசிக்கவும் செய்கிறதுஉத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனம் விடுதலை வேட்கையுடன் இயங்கும் இக்கவிதைகளில் படிமங்கள் அழகாகக் கைகோர்க்கின்றனஇயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.


5. பூனையைப் போல் அலையும் வெளிச்சம் (2000)
தொண்ணூறுகளில் கவனம் பெற்ற முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளனஇக்கவிதைகள் கோபம் கொள்கின்றனகாதல் வயப்படுகின்றனகாமம் துய்க்கின்றன.. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மன நிலைஜீவிதத்தின் உயிர்த்துடிப்புபேரனுபவத்தை சுட்டிக் காட்டும் தன்மைஇருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றுடன் இயங்கும் இக்கவிதைகள் தங்கள் அளவில் தனித்து நிற்கின்றனஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றனபுதிய சொல்லாட்சிகளும்புதுப்புது சொல்லிணைகளும்மின் தெறிப்பாய் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவுகூறுமாறு செய்கின்றன.


குட்டி ரேவதி

2 கருத்துகள்:

அன்பென்று கொட்டு முரசே சொன்னது…

யானுமிட்ட தீ தவிர்த்து எல்லாமே என் கிட்ட இருக்கு ரேவதி. இப்ப அதுவும் வாங்கியாச்சு. படிச்சுட்டுச் சொல்றேன். நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.

குட்டி ரேவதி சொன்னது…

நல்லது தோழி!
படித்து விட்டு, நன்றாக இருந்தால் ஏன் நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்றால் ஏன் அப்படி இல்லை என்றும் தெளிவாகச் சொல்லுங்கள்!


கூர்மையான விமர்சனமாக இருக்கும்!