நம் குரல்

மீன்தொட்டி
மென்னுதடுகள் பேசும் மீன்குஞ்சுகள்

வளையவரும் தொட்டியாய் இருந்தேன்

இரவு பகல் எழுச்சியுறும் கடலில்லை

பழம்பெரும் பாசிபடர்ந்த கூழாங்கற்களை

உருட்டிக் கொரித்தது குஞ்சின்பசி

குத்துயிர்க்கனவுகள் உடலை முட்டும்

உயிர்ப்பற்ற குமிழிகள் மேடுதட்டும்ஓர் இரவும் அதனோடவியும் உம் ஆண்மையும்

கடலாக்கியது என்னை

சுவரை எட்டியுதைத்தன என்குஞ்சுகள்

குட்டி ரேவதி

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மீன்குஞ்சுகள் உருவகம்..
நல்லா இருக்குங்க..

Shangaran சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.